தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது? வைரலாகும் தகவல்

Dhanush 57 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ள படம் குறீத்ஹ்ட அப்டேட் வெளியாகி உள்ளது.

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது? வைரலாகும் தகவல்

தனுஷ்

Published: 

13 Jan 2026 12:44 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான் அபடம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் எழுதி இயக்கி இருந்தார். இவர்தான் இந்தி சினிமாவில் நடிகர் தனுஷை அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தி சினிமாவில் நடித்த மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து தனது 55-வது படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து 56-வது படத்திற்காக தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படங்களுக்கான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது?

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவரது 57-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக தமிழரசன் பச்சைமுத்து லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் இந்த 2026-ம ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..