AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karur Constituency Election 2026: அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற கரூர் சட்டமன்ற தொகுதி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?

கரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முக்கியமான அரசியல் தாக்கம் கொண்ட தொகுதியாகக் பார்க்கப்படுகிறது. இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சட்டமன்றத் தொகுதி மட்டுமல்லாமல், கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது ஒரு பொதுத் தொகுதி ஆகும்.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Apr 2026 21:29 PM IST
கரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முக்கியமான அரசியல் தாக்கம் கொண்ட தொகுதியாகக் பார்க்கப்படுகிறது. இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சட்டமன்றத் தொகுதி மட்டுமல்லாமல், கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது ஒரு பொதுத் தொகுதி ஆகும்.

கரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முக்கியமான அரசியல் தாக்கம் கொண்ட தொகுதியாகக் பார்க்கப்படுகிறது. இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சட்டமன்றத் தொகுதி மட்டுமல்லாமல், கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது ஒரு பொதுத் தொகுதி ஆகும்.

1 / 6
கரூர் சட்டமன்றத் தொகுதியில் கரூர் நகரம், இனாம்கரூர், தாந்தோணி ஒன்றியம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் அடங்குகின்றன. இந்த தொகுதியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் தொகுதி தொழில் மற்றும் வணிக ரீதியாக மிகவும் முக்கியமானது. குறிப்பாக துணிநூல் மற்றும் ஏற்றுமதி, ஹோம் டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பு, வேளாண்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவை அதிகமாக உள்ள பகுதியாக இது விளங்குகிறது.

2 / 6
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், கரூர் தொகுதியில் வி. செந்தில் பாலாஜி (திமுக) கிட்டத்தட்ட 1,01,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக) 89,399 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையமும் இடம்பெற்றன.

3 / 6
கரூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், இது அதிமுகவின் வலுவான கோட்டையாகவும் பார்க்கப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக ஏழு முறைவும், திமுக மூன்று முறைவும் வெற்றி பெற்றுள்ளன.

4 / 6
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில், மக்கள் தரப்பில் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதி, சாலை மற்றும் நகர மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

5 / 6
இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக சார்பில் தியாகராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் களம் இறங்குகிறார். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதியழகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்தாலும், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

6 / 6
Follow Us