ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Radhika Sarathkumar's Colony Movie First Look Poster Out : நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக தற்போது நடித்து வரும் படம் காலனி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

காலனி படம்
தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அறம். இந்தப் படத்தை இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் கோபி நயினார். பொலிட்டிகள் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி,
மகாலட்சுமி, கிட்டி, வேல ராமமூர்த்தி, இ.ராம்தாஸ், ஜீவா ரவி, அமைச்சராக டி.சிவா விக்னேஷ், ரமேஷ், வினோதினி வைத்தியநாதன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக கோபி நயினார் இயக்க உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
வெளியானது காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
அதன்படி இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் காலனி. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அதிதி மூவிஸ் சார்பில் டாக்டர் ஆர். நாகராஜன் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் தேவா இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Malavika Mohanan: விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டாக பார்க்கிறேன் – மாளவிகா மோகனன்!
இயக்குநர் கோபி நயினார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here’s the first look and Motion poster of #Colony 🌟 Coming to theatres soon ⏳#AditiMovies @realradikaa @ianjalinair @ungaldevaoffl #MSBhaskar @editoranthony @VelrajR @YugabhaarathiYb @BrindhaGopal1 @kannan_kanal @teamaimpr pic.twitter.com/7bXn3LSCcF
— Gopi Nainar (@GopiNainar) April 13, 2026
Also Read… இயக்குநர் ஹரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நடிகர் பிரசாந்த்