திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்தது சேரனின் யுத்தம் செய் படம்!

15 Years Of Yutham Sei Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகர் என மக்களிடையே பிரபலம் ஆனவர் சேரன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் யுத்தம் செய். இது தற்போது 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்தது சேரனின் யுத்தம் செய் படம்!

யுத்தம் செய் படம்

Published: 

03 Feb 2026 21:31 PM

 IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே மிகவும் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் தொடர்ந்து படங்களை இயக்கிவந்த நிலையில் தற்போது அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். இயக்குநராக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற மிஸ்கின் தற்போது நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் யுத்தம் செய். மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சேரன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சேரன் உடன் இணைந்து நடிகர்கள் தீபா ஷா,
ஒய்.ஜி.மகேந்திரன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், செல்வா, மாணிக்க விநாயகம், ஜி.மாரிமுத்து, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, சங்கர், சுனில் சௌத்ரி, இ.ராம்தாஸ், யுகேந்திரன், ஆடுகளம் நரேன், பாலாஜி கே. மோகன், சாருலதா மணி, நீது சந்திரா, அமீர், சாரு நிவேதிதா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்தது யுத்தம் செய்:

இந்தப் படத்தில் ஒரு பெண் கடத்தல் குறித்து விசாரணை நடத்தும் போது அந்த சம்பவத்தில் இருந்து அடுத்தடுத்த குற்றங்களின் முடிச்சுகள் வருகின்றது. இதனை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிகரும் இயக்குநருமான சேரன் நடித்து இருப்பார். இவர் இந்த வழக்கை எடுத்து விசாரிக்கையில் பல திடிக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. மேலும் பல வயதான ஆண்களின் பாலியல் ஆசைகளை தீர்ப்பதற்காக பெண்களை கடத்திவந்து தவறாக அவர்களை பயன்படுத்துவது குறித்தும் தகவல்கள் தெரிகிறது. இறுதியில் பெண்கள் கடத்தலை எப்படி தடுக்கிறார் சேரன் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Also Read… ஏ அழகிய தீயே… ரீ ரிலீஸாகிறது 25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே படம்

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை… வைரலாகும் தகவல்

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..