அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்னை… பிக்பாஸில் பார்வதிக்கு இதுதான் பிரச்னையா? – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கடந்த 3 நாட்களாக தான் நிகழ்ச்சி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பிரச்னை தொடங்கியுள்ளது.

அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்னை... பிக்பாஸில் பார்வதிக்கு இதுதான் பிரச்னையா? - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

14 Nov 2025 12:42 PM

 IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இடையே நட்பும் உறவும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் இருந்தே தொடர்ந்து இதுவரை 9-வது சீசன் வரை வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவரு ஒரு உறவு முறையை வைத்துக்கொண்டு பழகி வருகிறார்கள். இதில் எத்தனைப் பேர் போட்டியில் இருந்து வெளியே சென்ற பிறகு அதே உறவை தொடர்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய போதே போட்டியாளர்கள் கிடையே கிசுகிசுவும் தொடங்கியது. அதன்படி இந்த சீசன் தொடங்கிய போது கம்ருதின் மற்றொரு போட்டியாளரான அரோரா மீது விருப்பம் இருப்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் அரோரா கம்ருதின் இடம் பேசினாலும் வேறு ஒரு போட்டியாளரான துஷார் உடன் நெருக்கமாக இருந்தார். இது என்ன முக்கோண காதலாக உள்ளது என்று பார்வையாளர்கள் தொடர்ந்து விமர்சனத்தை வெளியிட்டு வந்தனர். இப்படி இருந்த சூழலில் கம்ருதின் அரோராவை விட்டுவிட்டு பார்வதியிடம் நெறுக்கமாக பேசத் தொடங்கினார். இப்படி இருக்கும் சூழலில் கடந்த வாரம் துஷார் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தான் பிக்பாஸில் சர்ச்சைகளும் கிளம்பியது.

அரோரா குறித்து திவாகரிடம் புறணி பேசும் பார்வதி:

அதன்படி துஷார் வீட்டை விட்டு வெளியேறியது மீண்டும் கம்ருதின் உடன் அதிகமாக பேசத் தொடங்கினார். இதனால் கடுப்பான பார்வதி நேரடியாகவே அரோராவிடம் சென்று தனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறினார். ஆனாலும் கம்ருதின் தொடர்ந்து அரோராவிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.

இதற்கு இடையில் கம்ருதின் குறித்து பார்வதி புறணி பேசியது கம்ருதினுக்கு தெரியவர அவர் பார்வதியிடம் சண்டையிட்டு தற்போது அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் பார்வதி அரோராவின் கேரக்டர் குறித்து திவாகரிடம் புறன்ணி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Also Read… இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி – அடுத்த இயக்குநர் இவரா?