பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைப்பெற்ற ஓபன் நாமினேஷன் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி தற்போது 10 வாரங்கள் முடிந்து 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் ஓபன் நாமினேஷனாக நடைபெறுகின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைப்பெற்ற ஓபன் நாமினேஷன் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

15 Dec 2025 10:48 AM

 IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தி மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வரும் நிலையில்  மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் நாகர்ஜுனாவும், கன்னட சினிமாவில் கிச்சா சுதீப் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். அதே போல தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த 10-வது வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்களில் இருந்து ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இன்று நடைப்பெற்ற ஓபன் நாமினேஷன்:

அதன்படி இந்த பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்ய நினைக்கிறார்களோ அவர்களுக்கு முகத்தில் பெயிண்டை பூசி சரியான காரணங்களுடன் நாமினேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ரம்யா ஜோவை தொடர்ந்து இன்று வெளியேறபோவது இவர்தான்… கசிந்தது தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது பராசக்தி படத்திலிருந்து 3-வது சிங்கிள்

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்