நான் எனக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதற்காக ஸ்பான்சர்களை தேடவில்லை – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேச்சு!
Actor Ajith Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தனது ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அஜித் குமார் விளம்பர படத்தில் நடித்தது ட்ரோலான நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து தமிழ் மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு உலகம் முழுவது ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். அதன்படி நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பேட்டிகளை அளித்து வந்தார். அதன்பிறகு படங்களை தவிர்த்து பொது நிகழ்வுகளிலும் பேட்டிகளிலும் பங்கேற்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார்.
ஏன் நடிகர் அஜித் குமார் அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா அல்லது வெற்றி விழா என எதிலும் கலந்துகொள்ளமாட்டார். சமூக வலைதளத்தில் சொந்தமாக கணக்கு கூட இல்லாத அஜித் குமாரை அவரது ரசிகர்கள் படம் வெளியாகும் போது மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டும். இப்படி இருந்த சூழலில் நடிகர் அஜித் குமார் நடிப்பது மற்றும் இன்றி தனது கார் ரேஸிங்கிலும் அதிக அளவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கார் ரேஸிங்கை மக்களுக்கு அதிக அளவில் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பேட்டிகளையும் கொடுக்கத் தொடங்கினார். இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக எந்தவித விளம்பர படத்திலும் நடிக்காத அஜித் குமார் கேம்பா என்ற கூல்ரிங்ஸ் விளம்பர படத்தில் நடித்தது சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது ஏன் நடித்தார் என்று பல ட்ரோல்கள் ஏற்பட்டது.




சொத்து சேர்ப்பதற்காக ஸ்பான்சர்களை தேடவில்லை:
மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கும் அஜித்குமார் தொடர்ந்து பல பேட்டிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். மேலும் சமீபத்தில் கேம்பா என்ற ஒரு விளம்பர படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம் தனது சினிமா வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளாக விளம்பர படங்களில் நடிக்க வேண்டாம் என்று இருந்த நடிகர் அஜித் குமார் தற்போது நடித்ததுதான்.
இந்த நிலையில் தான் ஸ்பான்சர்களை தேடுவது ஏன் என்று நடிகர் அஜித் குமார் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது நான் ஸ்பான்சர்களை தேடுவது எனது சொந்த வாழ்க்கைக்கு சொத்து சேர்ப்பதற்காக இல்லை. இந்த விளையாட்டிற்காக தான் நான் ஸ்பான்சர்களை தேடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
இணையத்தில் கவனம் பெறும் அஜித் குமார் பேச்சு:
I’m not seeking a sponsor to build my personal wealth. I’m trying to give back to the sport.
Not every association is about money—some are about purpose…
Always love you unconditionally, THALA @Akracingoffl ❤️#AjithKumar #AjithKumarRacing #Ak64 pic.twitter.com/YRKvA5TRGC— BangaloreCityKingMakers (@BangaloreMakers) January 16, 2026
Also Read… ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?