Ajith Kumar: கேரளாவில் மகளுடன் பகவதி அம்மன் கோவிலில் அஜித் குமார் சிறப்பு வழிபாடு.. அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்…!
Ajith Kumars Darshan At Ootukulangara Temple: கோலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் இன்று 2025 டிசம்பர் 30ம் தேதியில் கேரளாவில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவிலில் தனது மகளுடன் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். அந்த வகையில் அவரை காண ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர்களுடன் எளிமையாக பழகிய அஜித் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும், கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சமீபத்தில் மலேசியாவில் (Malaysia) நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டிருந்தார். இந்த ரேஸில் கலந்துகொண்ட அஜித் குமாரின் அணி 4வது இடத்தை பிடித்திருந்தது. மேலும் இந்த ரேஸிங்கின் போது அஜித் குமாரின் ஆவணப்படமும் தயாராகிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கார் ரேஸை முடித்து சமீபத்தில் இந்திய திரும்பினார். இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 30ம் தேதியில் கேரளாவில் (Kerala) புகழ்பெற்ற, பாலக்காடு ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவிலில் (Ootukulangara Bhagavathy Amman Temple) சிறப்பு வழிபாடு செய்துள்ளார். இந்த வழிபாட்டில் அஜித் குமார் தனது மகள் அனோஷ்கா தரிசனம் செய்திருந்தார். இந்த தரிசனத்தில் தல அஜித் குமார் எந்தவித பவுன்சர் பாதுகாப்பும் இல்லாமல், எளியமுறையில் தெய்வத்தை வழிபாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இவரை பார்ப்பதற்கு அங்கு ரசிகர்கள் கூடிய நிலையில், அங்கு சிறிது நேரத்தில் கூட்ட நெரிசலானது. இதனை அடுத்ததாக கேரளா போலீஸ் வந்து அஜித் குமாருக்கும், அவரின் மகளுக்கும் பாதுகாப்பு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தும், அவர்களை மகிழ்ச்சிபடுத்தியிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: 6 மாத கடின உழைப்பு.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் அறிவிப்பு வீடியோ!
பாலக்காட்டு ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவிலில் அஜித் குமார் வழிபாடு
Finally I has happened, A selfie with my favorite AK ❤️ #AjithKumar #AjithKumarRacing #Ajith #Palakkad #Kerala pic.twitter.com/wOSHSFQMVy
— Ashik Mohammed Moosa (@ashikmece) December 30, 2025
நடிகர் அஜித் குமார் இதற்கு முன் தனது மனைவி, மகன் என குடும்பத்துடன் பகவதி அம்மன் கோவிலுக்கு, மலேசிய ரேஸிற்கு செல்வதற்கு முன் தரிசனம் செய்திருந்தார். அந்த வகையில் தற்போது கார் ரேஸை முழுமையாக முடித்த நிலையில், மீண்டும் கேரளா பாலக்காடு ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். இவர் எளிய முறையில் தரிசனம் செய்தது ரசிகர்களிடையே பேசப்பட்டுவருகிறது.
அஜித் குமாரின் அடுத்த ரேஸ் :
நடிகர் அஜித் குமார் மலேசிய ரேஸை முடித்த கையேடு இன்னும் சில வாரங்களில் துபாயில் நடைபெறவுள்ள ஆசிய லீ மான்ஸ் போட்டியில் அஜித் குமார் கலந்துகொள்கிறார். இவர் இந்த போட்டியில் தனது புதிய அணியினருடன் கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் சூரியின் மண்டாட்டி படம்… புது அப்டேட் இதோ
கடந்த 2021ம் ஆண்டில் இந்த கார் ரேஸ் சீரிஸில் கலந்துகொண்ட நிலையில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் வரும் 2026ம் ஆண்டில் அஜித்தின் அணி இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.