Aishwarya Rajesh: அரசியலுக்கு வருவேனா? விஜய் அழைத்தாலும்… – ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
Aishwarya Rajesh About Political View : தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அரசியல் குறித்து பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh). இவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முதல் தனுஷ் (Dhanush) வரை பல உச்ச நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருகிறார். மேலும் தற்போது தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருந்து வருகிறார். தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டியர் (Dear). நடிகர் ஜி.வி. பிரகாஷிற்கு (GV. Prakash) ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து அடுத்து சில படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியான சுழல் 2 வெப் தொடர்நது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய வீடியோவானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் வருகை குறித்தும் மற்றும் தளபதி விஜய் (Thalapathy Vijay) பற்றியும் பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!
அரசியல் வருகையை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் :
அந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் விருப்பம் மற்றும் விஜய் பற்றி பேசியுள்ளார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விஜய் அழைத்தால் அரசியலுக்கு செல்வீர்களா ? என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “தளபதி விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? – கலங்கிய இயக்குநர்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படங்கள் :
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, கருப்பர் நகரம், மோகன்தாஸ் மற்றும் தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இவர் உத்தரகாண்டா என்ற கன்னட மொழி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படமானது விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.