ஜன நாயகன் படத்திற்கு பிறகு எச். வினோத்தின் அடுத்த ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

Director H Vinoth Next Plan After Jana Nayagan Movie Release: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச். வினோத். இவரது இயக்கத்தில் அடுத்ததாக எந்தப் படம் உருவாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்திற்கு பிறகு எச். வினோத்தின் அடுத்த ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

எச். வினோத்

Published: 

18 Mar 2026 10:54 AM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் எச்.வினோத். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகரக்ளிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் எச்.வினோத் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமான சதுரங்க வேட்டை தற்போது வரை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்படும் இயக்குநராக வலம் வந்த எச். வினோத் தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் கார்த்தி, அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களை இயக்குநர் எச். வினோத் இயக்கி உள்ளார். இதில் இறுதியாக தற்போது நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் நேற்று ரிவைசிங் கமிட்டு ஜன நாயகன் படத்தை பார்த்து முடித்த காரணத்தால் விரைவில் சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஜன நாயகன் படக்குழு திட்டமிட்டுள்ளபடி தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜன நாயகன் படத்திற்கு பிறகு எச். வினோத்தின் அடுத்த ப்ளான் இதுதானா?

இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச். வினோத்தின் திட்டம் என்ன என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி H. வினோத் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கிய பிறகே, தனுஷுடன் இணைவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்களின்படி, H. வினோத்தின் அடுத்த திரைப்படம் சூர்யாவுடன் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனுஷ் – H. வினோத் கூட்டணியிலான திரைப்படம் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு… வைரலாகும் போட்டோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… GV Prakash: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்