தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

Actress Trisha Krishnan visited Thalapathy Vijay | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வரும் நிலையில் த்ரிஷா விஜயின் வீட்டிற்கு வருகை தந்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ

விஜய் - த்ரிஷா

Published: 

04 May 2026 13:32 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி நடிகையாக மாறினார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளம் என் தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் 23 ஆண்டுகளாக உச்ச நடிகை என்ற இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன்:

இந்த நிலையில் இன்று அதிகாலை தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பனையூரில் உள்ள நடிகரும் தவெக தலைவருமான நடிகர் விஜய் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் தொடர்ந்து விஜய் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா விஜய் வீட்டிற்கு சென்றது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ஒரு ஓஜி லோகேஷின் படமாக இருக்கும்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ரத்னகுமார்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Aishwarya Lekshmi: விஜய் சார் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை.. எனக்கு இங்க ஓட்டு இல்லனு ரொம்ப வருத்தம் – ஐஸ்வர்யா லக்ஷ்மி

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..