‘எந்தக்கட்சியிலும் நான் இல்லை.. பொதுவெளியில் விவாதம் வேண்டாம்’ – வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை
Actress Trisha: நடிகை த்ரிஷா தனது பெயரை அரசியல் ரீதியாகவோ அல்லது பொது வெளியிலோ பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு தகவல்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட முழு விவரத்தை இந்தச் பதிவில் பார்க்கலாம் .

வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்கள் ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், நடிகை திரிஷா சார்பில் வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறான கருத்தை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை. அவ்வாறு அரசியல் கட்சியில் இணைந்து இருக்கவும் விரும்பவில்லை. முன்பு இருந்ததைப் போல, நடுநிலையுடன் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையே ஒருபோதும் பொது இடங்களில் விமர்சனம் செய்யவோ அல்லது விவாத பொருளாகவோ மாற்றக் கூடாது என்பது எனது பொதுவான கருத்தாகும்.
அரசியல்வாதிகள் சமநிலையை பராமரிக்க வேண்டும்
மேலும், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும். தொழில் ரீதியாக என்னை பேச வேண்டுமே தவிர அரசியலில் என்னைப் பற்றி பேச விரும்பவில்லை. மேலும், எனது பெயரை தேவையில்லாத விஷயங்களில் சேர்க்கப்பட வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும் படிக்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தக்கூடாது”.. திண்டுக்கல் சீனிவாசன்..
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை
இதற்கு பதில் அளித்த அவர் என்னை பொறுத்த வரை தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்த நிலையில், நடிகை திரிஷா பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த விஜய், அண்ணா ஆரம்பித்த திமுகவை ஸ்டாலின் வைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா சார்பில் வழக்கறிஞர் அறிக்கை
சேலத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசிய விஜய்
எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி கே. பழனிசாமி வைத்துள்ளார். என்னை போல யாராவது தனியாக கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது 1 சதவீத வாக்குகளை பெற்று காண்பிக்கவும் என்று சவால் விடும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
மேலும் படிக்க: தயார் நிலையில் இடைக்கால பட்ஜெட்… சட்டப்பேரவையில் முன்னேற்பாடுகள்… அமைச்சர்கள் ஆய்வு!