ஜன நாயகன் படத்தில் விஜயின் அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை!
Jana Nayagan: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படம் இவரது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படக்குழு அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது.

நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் இருதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். டீ ஏஜிங்கை பயன்படுத்தி மகன் விஜயை நடிக்க வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருந்த நிலையில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்து இருந்தார். இதில் மகன் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடிப்பில் அவரது 69-வது படமாக உருவாகி வருகின்றது ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகரக்ள் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளசி, ரெபா மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார், தீஜே அருணாசலம் என பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து வரும் நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம் தமிழில் தயாரிகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதால் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் இந்த 69-வது படமான ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்று அவர் முன்னதாக அறிவித்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயின் இந்த இறுதிப் படத்தில் அவரது அம்மாவாக நடிகை ரேவதி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.