ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்
Super Star Rajinikanth Jailer Movie: வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னவிட்டு போகலனு படையப்பா படத்துல நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தைப் பார்த்து கூறியது போல 70 வயதைக் கடந்தும் நடிப்பதற்கு ப்ரேக் விடாமல் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த (Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்தப் படம் வேட்டையன். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்தில் இணைந்தார் நடிகர் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தனர். தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கூலி படத்தில் நடிக்கும் போதே ஜெயிலர் 2 படத்தில் கமிட்டான ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடிக்கும் போது கூலி படத்தின் அறிவிப்பு வெளியானது போல, தற்போது கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்ததாக தான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். அடுத்தடுத்து படங்களில் இடைவெளியே இல்லாமல் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் முன்னதாக 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு பணியில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் முதல் பாகத்தில் இருந்தவர்கள் உடன் இரண்டாம் பாகத்திலும் பலர் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம்?
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனா நடிகர் சந்தானம் தற்போது நாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக நாயகனாக மட்டுமே நடித்து வந்த நடிகர் சந்தானம் சமீபத்தில் நடிகர் சிம்புவின் படத்திற்காக காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்றிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சந்தானம் ஜெயிலர் 2 படத்திலும் காமெடி ரோலில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.