Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜூன் வரைக்கும் நோ வெயிட்டிங்… மே மாதமே ஓடிடியில் வெளியாகும் ரெட்ரோ படம்

Retro Movie OTT Update: நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வாசூலில் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது குறிப்பிடத்தக்கது

ஜூன் வரைக்கும் நோ வெயிட்டிங்… மே மாதமே ஓடிடியில் வெளியாகும் ரெட்ரோ படம்
ரெட்ரோ படம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 May 2025 16:33 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா படம் கூட படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடனான கூட்டணியை அறிவித்தார் நடிகர் சூர்யா. அவரது 44-வது படமான இதற்கு ரெட்ரோ என்று பெயர் வைத்தனர். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் மீதான ரசிகரக்ளின் எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது இந்தப் படம் கண்டிப்பாக சூர்யாவிற்கு கம்பேக்காக இருக்கும் என்று அவரது ரசிகரக்ள் நம்பிக்கை தெரிவித்தனர். ரெட்ரோ கெட்டப்பில் வந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டடினர்.

இந்த நிலையில் படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் ஜோடிப் பொருத்தம் மிகவும் அழகாக உள்ளது என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர்.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், சுவாசிகா, நாசர், கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.

படம் திரையரங்குகளில் வெளியாகி சூர்யா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றாலும் பொது மக்கள் படத்திற்கு கலவையான விமர்சனத்தையே தெரிவித்தனர். படத்தின் ட்ரெய்லர் பார்த்து வந்த எதிர்பார்ப்பு படத்தை பார்க்கும் போது பூர்த்தியடையவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியது. இதனைத் தொடர்ந்து படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 31-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,

மகிழ்ச்சி பெருக வேண்டுமா? வீட்டில் கவனிக்க வேண்டிய வாஸ்து
மகிழ்ச்சி பெருக வேண்டுமா? வீட்டில் கவனிக்க வேண்டிய வாஸ்து...
தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!
தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!...
சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி...
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?...
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!...
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!...
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு...
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?...
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!...