கோலிவுட் சினிமாவில் 2025-ல் இதுவரை வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள் என்னென்ன?
Hit Movies In Tamil: தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ஹிட் அடித்ததோ இல்லையோ சின்ன சின்ன படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை ஹிட் அடித்தப் படங்களை தற்போது பார்க்கலாம்.

மத கஜ ராஜா: இயக்குநர் சுந்த சி (Sundar C) இயக்கத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட், மணிவண்ணன், சுப்பராஜு, நிதின் சத்யா, சடகோப்பன் ரமேஷ், முன்னா சைமன் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியானாலும் படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல புது படங்களின் வரவு இருந்தாலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. இந்தப் படம் முழுக்க முழுக்க வெற்றியடைய சந்தானத்தின் காமெடி என்றே சொல்லாம். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதே மாதிரி பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த படங்களுக்கு இது ஒரு நம்பிகையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
குடும்பஸ்தன்: நடிகர் மணிகண்டன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்தப் படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தை நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். ஜனவரி மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையாங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், குடச்சனாத் கனகம், மற்றும் நிவேதிதா ராஜப்பன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டிராகன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் டிராகன். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். படம் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டூரிஸ்ட் ஃபேமிலி: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நாயகன் மற்றும் நாயகியாக நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து யோகிபாபு, கமலேஷ், மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என பலரும் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.