வரலாறு படைக்கப்பட்டுள்ளது… அண்ணன் விஜயின் வெற்றியைக் கொண்டாடும் நடிகர் விக்ராந்த்

Actor Vikranth celebrates Vijay victry in the TN Assembly Election 2026 : தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் தம்பியாக அறிமுகம் ஆனவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் அண்ணன் விஜயின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார்.

வரலாறு படைக்கப்பட்டுள்ளது... அண்ணன் விஜயின் வெற்றியைக் கொண்டாடும் நடிகர் விக்ராந்த்

நடிகர் விக்ராந்த்

Published: 

04 May 2026 16:17 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் தளபதி விஜயின் தம்பியாக தமிழக மக்களிடையே அறிமுகம் ஆனவர் நடிகர் விக்ராந்த். இவர் தளபதி விஜயின் அம்மா சோபா சந்திரசேகரின் தங்கை மகன் ஆவார். நடிகர் தளபதி விஜயின் சாயலில் இருக்கும் இவர் சினிமாவில் அறிமுகம் ஆன போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். ஆனால் விக்ராந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்பதால் தொடக்கத்தில் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அடுத்தடுத்து தற்போது நடிகர் விக்ராந்த் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விக்ராந்த் தொடர்ந்து படங்களில் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இணையதள தொடர்கள் மற்றும் படங்கள் என வெற்றி முகமாக உள்ளது நடிகர் விக்ராந்திற்கு. இந்த நிலையில் விக்ராந்த் இன்று சட்டமன்ற தேர்தலில் நடிகர் தளபதி விஜய் வெற்றியைப் பெற்று வருகிறார். இதனை கொண்டாடும் வகையில் விக்ராந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அண்ணன் விஜயின் வெற்றியைக் கொண்டாடும் நடிகர் விக்ராந்த்:

வரலாறு படைக்கப்பட்டுள்ளது!!! உன்னைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்,
விஜய் அண்ணா. மிக்க மகிழ்ச்சி தமிழ்நாட்டு மக்கள் உன் மீதும், உன் தொலைநோக்குப் பார்வை மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. உண்மையிலேயே இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம். உன் தலைமையினை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்; இம்மாநிலத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையுமென நம்புகிறேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… RJ Balaji: அட்லீயின் ராஜா ராணி படத்தை நான் கலாய்த்திருக்கிறேன்.. ஆனால் அவர் இப்போது – ஆர்.ஜே.பாலாஜி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… karuppu: பட்டாச கொளுத்துங்கடா.. சூர்யாவின் கருப்பு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..