ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு
Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து ரவி மோகன் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து நாயகனாக நடித்து வந்த நடிகர் ரவி மோகன் தற்போது மிரட்டும் வில்லனாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையிலேயே நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் ஜன நாயகன் படம் வெளியாவதாக இருந்தது. இந்தப் படங்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி வந்தாலும் பராசக்தி படக்குழுவினர் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து பேசியும் பதிவுகளை வெளியிட்டும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ரவி மோகன்:
ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். இந்த நிகழ்விற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருவதுடன் விஜயுடன் நிற்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, மனம் நொறுங்கிவிட்டது விஜய் அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை.. நீங்கள்தான் தொடக்கம். அந்தத் தேதி எப்போது வந்தாலும், அப்போதுதான் பொங்கல் தொடங்குகிறது. #istandwithvijayanna என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna pic.twitter.com/ccFy6iK4qM
— Ravi Mohan (@iam_RaviMohan) January 8, 2026
Also Read… Rishabh Shetty: ஜன நாயகன் ட்ரெய்லர் ஃபயர்… பராசக்தி ட்ரெய்லர் அற்புதம் – பாராட்டிய ரிஷப் ஷெட்டி!