AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடை வெயில் பொளக்க போகுது.. அடுத்த 4 நாட்களுக்கு உஷார்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Weather Update: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் வரும் 18ம் தேதி வரை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று வானிலை மையம் கணித்துள்ளது.

கோடை வெயில் பொளக்க போகுது.. அடுத்த 4 நாட்களுக்கு உஷார்.. வானிலை மையம் எச்சரிக்கை..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Apr 2026 06:39 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிழகத்தில் கோடை வெயில் உச்சமடைந்த பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சதமடித்து வருகிறது. இதனால், வெயிலில் இருந்து தப்பித்து ஆறுதல் தரும் விதமாக கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் படிக்க: “பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..

மழை நிலவரம்:

அந்தவகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் வரும் 18ம் தேதி வரை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை – முதல்வர் ஸ்டாலின்

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (ஏப்ரல் 15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வரும் நாள்களில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சதமடிக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us