Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்… இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!
Tamil Nadu Election 2026 Live: 5 மாநில தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தேர்தல் அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம்
LIVE NEWS & UPDATES
-
MK Stalin : தருமபுரியில் ஸ்டாலின் பரப்புரை
தருமபுரி பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின். அங்கிருந்தவர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
-
பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை – திலகபாமா
பணப்பட்டுவாசா சம்பவம் தொடர்பாக, “தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை” என்று திலகபாமா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என குற்றம்சாட்டினார்.
-
தேர்தல் பறக்கும் படையை உடனே அனுமதிக்கவில்லையா?
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக வேட்பாளர் திலகபாமா, தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
-
பெரம்பூர் பகுதியில் பணப்பட்டுவாடா?
சென்னை பெரம்பூர் 44வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகிப்பதாக பாமக வேட்பாளர் குற்றச்சாட்டு
-
PM Modi Covai visit : ஏப்ரல் 18ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடி
இதேபோல, வருகிற 18-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார்.
-
மாலையே டெல்லி திரும்பும் பிரதமர்
ரோடு ஷோ நிறைவடைந்த பிறகு மாலை 5:45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 6:20 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
-
தீவிர வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி
ரோடு ஷோவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
-
ரோடு ஷோவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
மாலை 4:30 முதல் 5:30 வரை வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ வில் பங்கேற்கிறார்.
-
மாலை 4 மணிக்கு நாகர்கோவில்
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கிருந்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4:10 மணி அளவில் நாகர்கோவில் வந்து சேர்கிறார்
-
PM Modi TN Visit : இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தேர்தல் நெருங்கி உள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இதே போல, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தேர்தல் கால அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
Published On - Apr 15,2026 7:01 AM