சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவது ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீட்டில் மீண்டும் ஒரு சண்டை வெடித்துள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 80 நாட்களை எட்டியுள்ளது. இதில் இந்த வாரம் மொத்தம் 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் வீடு தலையாக தேர்வான கம்ருதினை தவிர மற்ற 10 போட்டியாளர்களும் இந்த வாரத்திற்கான நாமிநேஷனில் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மூன்று முறை டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வருகின்ற வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது வார இறுதியில் தான் தெரியவரும். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வருகின்றனர்.
அதன்படி இதுவரை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சாண்ட்ரா, சபரி, கானா வினோத், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்த நிலையில் இன்று அமித் பார்கவ் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருவது போல புரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சண்டையை தொடங்கி உள்ளது.
பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை:
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பூரி சுடுவதில் அமித் மற்றும் வினோத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்போது சண்டையில் முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Arun Vijay: தளபதிக்கு என் ஆதரவு இருக்கும்… ஜன நாயகன் படத்திற்காக வெயிட்டிங்- அருண் விஜய் பேச்சு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day80 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/U4zJvVdHeG
— Vijay Television (@vijaytelevision) December 24, 2025
Also Read… சிம்புவின் நடிப்பில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது