AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

50 Years Of Rajinikanth : அபூர்வ ராகங்களுக்கும் கூலிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? செம ட்ரீட் காத்திருக்கு!

50 Years of Rajinikanth : அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த நிலையில் இந்த கட்டுரையில் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்துக்கும் கூலி படத்துக்கும் உள்ள ஒற்றுமை குறித்து பார்க்கலாம்.

50 Years Of Rajinikanth : அபூர்வ ராகங்களுக்கும் கூலிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? செம ட்ரீட் காத்திருக்கு!
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 May 2025 11:25 AM IST

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவைப் போல ஜப்பானிலும் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie) படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான புரமோ வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தை அடுத்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

அபூர்வ ராகங்கள் படத்துக்கும் கூலி படத்துக்கும் உள்ள ஒற்றுமை

ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். துவக்க காட்சியிலேயே ஒரு கேட்டை திறந்து உள்ளே நுழைவார் ரஜினிகாந்த், மறைமுகமாக தமிழ் ரசிகர்கள் மனதின் உள்ளேயும் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15, 1975 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கூலி படம் ஆகஸ்ட் 14, 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. சும்மாவே ரஜினி படம் வெளியானால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு அளவு இருக்காது. இந்த நிலையில் அவரது 50 ஆண்டை கொண்டாடும் விதமாக  கூலி படம் வெளியாவதால் அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.

கூலி படத்தின் பவர் ஹவுஸ் வைப் வீடியோ

சிவாஜி ராவ், ரஜினிகாந்த்தாக மாறிய கதை

அபூர்வ ராகங்கள் படத்தின் அறிமுக காட்சியில் அவரை ஸ்ருதி பேதம் என  பாலசந்தர் அறிமுகப்படுத்துவார். சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற சிவாஜி ராவ்வை பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்படுகிறார். அவரது செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தது பாலசந்தரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மேலும் அவரது கண்களில் ஒரு மேஜிக்கை பார்த்திருக்கிறார். உடனடியாக அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது அடுத்தடுத்த படங்களில் அவரை பயன்படுத்த நினைக்கிறார். சிவாஜி ராவ் என்ற அவரது பெயரைக் கேட்டதும் சற்று யோசித்திருக்கிறார். காரணம் தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு சிவாஜி இருக்கிறார். இந்த நிலையில் தனது புகழ்பெற்ற நாடகமான மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் ஒரு கதாப்பாத்திர பெயரான ரஜினிகாந்த் என்பதை அவருக்கு சூட்டுகிறார். இப்படித்தான் தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிடைத்தார்.

Follow Us