தபால் ஓட்டு என்றால் என்ன?.. யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?
What is a Postal Ballot | இந்தியாவில் தபால் ஓட்டு செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால், அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில், இந்தியாவில் யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்த தகுதியானவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் 5 மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல்கள் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்காக கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது, வேட்பாளர்களை அறிவிப்பது, பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை சோதனை செய்வது, வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது என இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தபால் ஓட்டு (Postal Ballot Voting) என்றால் என்ன, தபால் ஓட்டு செலுத்த யாருக்கெல்லாம் அனுமதி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தபால் ஓட்டு செலுத்த யாருக்கெல்லாம் அனுமதி
இந்தியாவில் தபால் ஓட்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்லது. குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு செலுத்தும் உரிமை வழங்கப்படும்.
- தேர்தல் பணியில் உள்ளவர்கள், காவல்துறை பணியாளர்கள், ஊடக பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் ஓட்டு செலுத்த அனுமதி உள்ளது.
- தேர்தல் தினத்தில் மருத்துவமனைகள் அல்லது அவசரகால மருத்துவ சேவைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டு செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?
தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பிப்பது எப்படி?
மேற்குறிப்பிட்டபடி, தபால் ஓட்டு செலுத்த தகுதி உள்ள வாக்காளர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள் படிவம் 12டி அல்லது தொடர்புடைய படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். தபால் ஓட்டு என்பது குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு சிறப்பு அம்சம் என்பதால், அந்த முறையில் வாக்களிக்க சில கடுமையான விதிகள் பின்பற்றப்படும்.
இதையும் படிங்க : அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் எந்த தொகுதியில் போட்டி?
அதிக தபால் ஓட்டுகள் பதிவான மாநிலங்கள்
- இந்தியாவிலேயே அதிக தபால் ஓட்டுகளை கொண்டுள்ள மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது. அங்கு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 5.12 லட்சம் மக்கள் தபால் ஓட்டுகளை செலுத்தியுள்ளனர்.
- இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. இங்கு 3.76 லட்சம் மக்கள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர்.
- இந்த பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 3.11 லட்சம் மக்கள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர்.