விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்… திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!

TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அணிந்திருக்கும் உடை மாதிரியை அணிந்து கொண்டு அவரது ஆதரவாளர்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கச்சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்... திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!

விஜய் போல உடை அணிந்து வந்த வாக்காளர்கள்

Published: 

23 Apr 2026 15:20 PM

 IST

தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனால், கடந்த சட்டமன்ற தேர்தல்கள் போல அல்லாமல் இந்த சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்கு சதவீதமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரது மத்தியிலும் முக்கிய இடம் பிடித்துள்ளார். ஏனென்றால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடை, உடை, பாவனை ஆகியவற்றை அவரது ரசிகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் பின்பற்றி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்யை பின்பற்றும் ஆதரவாளர்கள்

சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவெக தலைவர் விஜய் பேசுவது போலவும், அவர் அணிந்திருக்கும் ஆடைகள் போல அணிந்து வருவதும், அவரது வலது கையில் அணிந்திருக்கும் காப்பு போல அணிந்து கொள்வதும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவரது நடைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்லும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வேட்பாளர்கள் முதல் ஆதரவாளர்கள் வரை அனைவரும் ஜனநாயகன் கடமை ஆற்ற போவதாக தெரிவித்து வந்தனர்.

மேலும் படிக்க: “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!

விஜய் போல உடை அணிந்து வந்த ஆதரவாளர்கள்

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் அந்த கட்சிக்கு ஆதரவான பெண்கள் மற்றும் ஆண்கள் தவெக தலைவர் விஜய் அணைந்திருக்கும் ஆடையை போன்று, அதாவது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்தவாறு வாக்களிப்பதற்காக அணிவகுத்து வந்திருந்தனர். அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று தங்களுக்கான வாக்குகளை செலுத்திவிட்டு வாக்குச்சாவடியின் வெளியே குழுவாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் செல்பி

இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு தொகுதிகள் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அவர் மேற்கொண்ட பிரச்சாரங்களில், வெள்ளை நிற சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிந்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படியே, சட்டமன்ற தேர்தலில் தவெக ஆதரவாளர்கள் குழுவாக ஒரே மாதிரியான சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வாக்களிக்க வந்துள்ளனர்.

மேலும் படிக்க: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?

Follow Us
Related Stories
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..
கடைசி கட்டத்தில் 2026 தேர்தல்.. மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு..
வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!
வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்… மேற்கு வங்கத்தில் சம்பவம்!
2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!
வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..