AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடைசி கட்டத்தில் 2026 தேர்தல்.. மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு..

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 90% வாக்குப்பதிவை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடைசி கட்டத்தில் 2026 தேர்தல்.. மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Apr 2026 18:09 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 90% வாக்குப்பதிவை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், காலை முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

82% வாக்குப்பதிவு:

மாலை 5 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியதாக சொல்லலாம். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 82% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க: வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

காலை முதல் அமைதியான முறையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களித்து வருகின்றனர். அதேபோல், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் வாக்களிக்க தமிழகத்திற்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

தலைவர்கள் போட்டியிடும் தொகுதியின் நிலவரம்:

முக்கியமாக, தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 83.58% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 89.09% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 71.88% வாக்குப்பதிவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 86.72% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 79.32% வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.

ஜனநாயக திருவிழா நிறைவடைய இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில், வாக்காளர்கள் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிகபட்ச வாக்குப்பதிவு 72% ஆக இருந்த நிலையில், தற்போது அது 82% ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us