Tamil Nadu Polling: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது சுமார் 7% அதிகமாக பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 23, 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் காலை முதலே மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது சுமார் 7% அதிகமாக பதிவாகியுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு திரும்பி வந்து வாக்களித்து வருகின்றனர்.
சென்னையில் மட்டும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி,
- விருகம்பாக்கம் – 59.30%
- தியாகராய நகரம் – 58.01%
- அண்ணா நகரம் – 56.61%
- குளத்தூர் – 56.59%
- வேளச்சேரி – 56.26%
- பெரம்பூர் – 56.24%
- ஆர்.கே. நகர் – 55.68%
- வில்லிவாக்கம் – 55.66%
- ஆயிரம் விளக்குகள் – 55.05%
- துறைமுகம் – 54.39%
- எழும்பூர் – 53.67%
- சேப்பாக்கம் – 53.55%
- சைதாப்பேட்டை – 52.76%
- ராயபுரம் – 49.67%
- மயிலாப்பூர் – 48.86%
- திரு.வி.க. நகர் – 48.76%
மேலும் படிக்க: “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!
அதேபோல் ஒட்டுமொத்த தமிழகத்தில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
- திருப்பூர் – 62.97%
- நாமக்கல் – 62.51%
- ஈரோடு – 61.79%
- சேலம் – 61.42%
- கரூர் – 60.77%
- திண்டுக்கல் – 59.79%
- தர்மபுரி – 59.02%
- காஞ்சிபுரம் – 58.98%
- ராணிப்பேட்டை – 58.62%
- கோவை – 58.24%
- திருவண்ணாமலை – 58.23%
- விழுப்புரம் – 58.23%
- திருச்சி – 57.66%
- பெரம்பலூர் – 57.55%
- வேலூர் – 57.49%
- திருப்பத்தூர் – 57.49%
- விருதுநகர் – 57.27%
- கள்ளக்குறிச்சி – 57.15%
- நாகை – 57.07%
- புதுக்கோட்டை – 56.78%
- திருவாரூர் – 56.00%
- செங்கல்பட்டு – 56.28%
- கிருஷ்ணகிரி – 56.21%
- திருவள்ளூர் – 55.45%
- அரியலூர் – 55.18%
- கடலூர் – 55.13%
- தேனி – 55.63%
- தஞ்சாவூர் – 54.83%
- மதுரை – 54.75%
- சென்னை – 54.58%
- தென்காசி – 54.24%
- சிவகங்கை – 53.50%
- மயிலாடுதுறை – 53.59%
- தூத்துக்குடி – 52.55%
- இராமநாதபுரம் – 51.54%
- திருநெல்வேலி – 50.73%
- நீலகிரி – 50.42%
- கன்னியாகுமரி – 50.35%