Villivakkam Constituency Election 2026: 5 முறை வெற்றிப்பெற்ற திமுக.. இம்முறையும் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி கிடைக்குமா?
Tamil Nadu Elections 2026: வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில் பொதுமக்கள் தரப்பில் மழைநீர் வடிகால் வசதிகள் போதிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இங்கு மழைநீர் தேக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல், இங்கு கழிவுநீர் வடிகால் வசதியும் முழுமையாக அமைக்கப்படவில்லை என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
மார்ச் 9, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுகவினர் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என அதிமுகவும், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி:
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது முழுக்க நகர்ப்புறத்தைச் சேர்ந்த தொகுதி ஆகும். வடசென்னையின் முக்கிய குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கியதால், அரசியல் ரீதியாகவும் இது முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, சென்னை மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றியழகன் கிட்டத்தட்ட 76,127 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் 38,890 வாக்குகள் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட 37,237 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.’
அதிமுக vs திமுக:
இந்த தொகுதியைப் பொருத்தவரையில் திமுக வலிமையாக உள்ளது. அதாவது 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலிருந்து திமுக ஐந்து முறையும், அதிமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு..
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில் பொதுமக்கள் தரப்பில் மழைநீர் வடிகால் வசதிகள் போதிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இங்கு மழைநீர் தேக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல், இங்கு கழிவுநீர் வடிகால் வசதியும் முழுமையாக அமைக்கப்படவில்லை என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில் திமுகவின் கை சற்று ஓங்கி இருக்கிறது. எனவே, வெற்றி வாய்ப்பை பொருத்தவரையில் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் மக்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து முடிவுகள் மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.