தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு….பட்டியலில் மிஸ் ஆன செங்கோட்டையன்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு....பட்டியலில் மிஸ் ஆன செங்கோட்டையன்!

தவெக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு அமைப்பு

Updated On: 

09 Jan 2026 15:31 PM

 IST

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையை தயார் செய்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், கே. ஜி. அருண்ராஜ், ஜே. சி. டி. பிரபாகரன், ஏ. ராஜ்மோகன், டி. எஸ். கே. மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், ஆர். பரணி பாலாஜி, ஜே. முகம்மது பர்வேவேஸ், டி. கே. பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்திய குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்படும்

இந்த குழுவானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள், விவசாய சங்கங்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர்கள் சங்கங்கள், தொழில் வல்லுனர்கள், மகளிர் அமைப்புகள், செவிலியர்கள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை பெற உள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டையும், மக்களையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க: “இதுதான் எனது 2026 தேர்தல் வாக்குறுதி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இந்த குழுவுக்கு தமிழக வெற்றி கழக தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை இந்த குழு சந்திக்கும் போது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

குழுவில் இடம்பெறாமல் போன செங்கோட்டையன்

இந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஜே. சி. பிரபாகரின் பெயர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சரும், தவெகவின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே. ஏ. செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றி கழகம் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  தற்போது, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவை விஜய் அறிவித்தையடுத்து, தேர்தல் பணிகளில் தவெக மேலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் போட்டிகள் - முழு விவரம் இதோ
மும்பையில் தீவிரவாத தாக்குதல்? வெளியான அதிர்ச்சி தகவல்
வட இந்தியாவில் கடும் குளிர்... தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை - முழுமையான வானிலை நிலவரம் இதோ