Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.3,000 கொடுக்கிறோம், ஓட்டுப்போட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை

Minister Duraimurugan’s Controversial Speech : வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 உட்பட நலத்திட்டங்கள் வழங்குவதால் மக்கள் ஓட்டுப்போட வேண்டும் என தெரிவித்தார்.

ரூ.3,000 கொடுக்கிறோம், ஓட்டுப்போட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை
அமைச்சர் துரைமுருகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Jan 2026 20:46 PM IST

வேலூர், ஜனவரி 8 : வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மேல்பாடியில், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பொங்கல் (Pongal) பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 8. 2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த ஆண்டு பொங்கல் மக்கள் அனைவருக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் என்று தெரிவித்தார். அரசுக்கு இது பெரும் செலவாக இருந்தாலும், செலவைக் கணக்கில் கொள்ளாமல் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

குறிப்பாக, பொங்கலுக்கு ரூ.3000, மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 என ஆயிரக்கணக்கான ரூபாய்களை அரசு வழங்கி வருவதாக பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு மக்கள் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. நான் அளித்த வாக்குறுதியின்படி அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்துவதோடு, கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதையும் படிக்க :  “அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!

இவ்வளவு நலத்திட்டங்களை செயல்படுத்திய இந்த அரசு தொடர வேண்டும் என்பதற்காகவே மக்களின் ஆதரவை நாடுகிறோம், ரூ.3000 வழங்கும் திட்டத்தின் மூலம் அரசை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. இதனால் வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தங்களின் ஒரே வேண்டுகோள் என்று பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.3000 வழங்கும் அரசின் ‘ திட்டம் வெற்றி பெறாது என கூறி வருகின்றனர். அரசின் பாட்ஷா பலிக்காவிட்டாலும் பரவாயில்லை; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடிக்கும் அரசியல் பாஷா நாடகம் வெற்றி பெறாமல் இருந்தாலே போதும் என விமர்சித்தார்.

இதையும் படிக்க : ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு…முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

இதற்கு முன்பு பேசிய வேலூர் எம்பி கதிர் ஆனந்த், வேலூர் மாவட்டத்தில் எங்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவது என்று அமைச்சரிடம் ஆலோசித்தபோது, மேல்பாடியில் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். மேல்பாடி அமைச்சர் துரைமுருகனின் மனதிற்கு நெருக்கமான பகுதி. அதனால் அங்கு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டப்பட்டு வருகிறார். தமிழர்களின் உறவுகளும் தமிழர்களே என்பதே இந்த மண்ணின் பண்பாடு என்று பேசினார்.