Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூரசம்ஹாரம் கிடையாது.. இப்படியும் ஒரு முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?

வேலூர் மாவட்டம் இரத்தினகிரியில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிய இக்கோயில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகை தருகின்றனர். ஆறு என்பதற்கான சிறப்புடன் நடத்தப்படும் பூஜைகள், ஆடி கிருத்திகை அலங்காரம் ஆகியவை இந்த கோயிலில் பிரபலமானது.

சூரசம்ஹாரம் கிடையாது.. இப்படியும் ஒரு முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
ரத்தினகிரி முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 May 2025 18:55 PM IST

தமிழ் கடவுள் முருகனுக்கு (Lord Murugan) உலகெங்கிலும் பல்வேறு பெயர்களில் கோயில்கள் உள்ளது. முருகனை நாடுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிக அளவில் உள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முருகன் கோயிலில் விசேஷ நாட்களில் குவிந்து வருகின்றனர். இப்படியான முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதே சமயம் வேலூர் மாவட்டம் (Vellore) இரத்தினகிரியில் அமைந்துள்ள பாலமுருகன் (Ratnagiri Arulmigu Murugan Temple) கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினமும் காலை ஆறு முப்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலையில் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். அருணகிரிநாதர் இந்த கோயிலில் அருளிருக்கும் பாலமுருகனை திருப்புகழில் ஒப்பில்லாத மாமணி மற்றும் வித்தகர் என குறிப்பிட்டு பாடி இருக்கிறார்.

கோயில் உருவான வரலாறு

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழியாகும். அந்த வகையில் இந்த பாலமுருகன் கோயிலானது குன்றின் மேல் தான் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குன்றில் முருகன் கோயில் இருந்த நிலையில் அங்கு செல்வதற்கு சரியான வசதி இல்லாததால் சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. இப்படியாக ஒருநாள் சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அர்ச்சகர் இடம் சுவாமிக்கு தீபாரதனை காட்டும்படியும், பத்தி ஏற்றி வைக்கும் படியும் தெரிவித்து இருக்கிறார். ஆனால் எதுவுமே கோயிலில் இல்லை என அர்ச்சகர் சொல்ல இப்படி பரிதாபமான நிலையில் இருக்கும் கோயில் முருகனுக்கு தேவை தானா என அந்த பக்தர் வருந்தினார்.

உடனே அந்த இடத்திலேயே அந்த பக்தர் மயங்கி விழுந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அர்ச்சகர் ஆட்களை அழைத்தவர மலையடிவாரத்திற்கு சென்றிருந்தார். இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த பக்தர் இந்த முருகன் என்னை ஆட்கொண்டு விட்டான் கோயில் திருப்பணி தவிர எனக்கு வேறு சிந்தனை இல்லை என மனதில் எழுதி விட்டு யாரிடமும் பேசாமல் அமர்ந்து விட்டார். அதன் பிறகு அனைவரும் சேர்ந்து குன்றின் மேல் முருகனுக்கு கோயில் கட்டியதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் இருக்கும் முருகனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் தொடங்கி பூஜையில் பயன்படுத்தப்படும் மலர்கள், நைவேத்தியம், தீபாராதனை என அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது போல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோயிலில் முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிவனிலிருந்து தோன்றியவர் முருகன் என்பதால் இவர் சிவ அம்சமாகவும் பார்க்கப்படுகிறார்.

மேலும் இந்த முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை அன்று ரத்தினங்களால் ஆன ஆடையால் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கிருக்கும் முருகன் குழந்தை (பால) வடிவில் இருப்பதால் தினமும் இரவு அத்த ஜாம பூஜை என்பது பால் நைவேத்தியம் வைக்கப்படுகிறது. குழந்தை முருகன் என்பதால் இங்கு கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடப்பதில்லை.

இந்த பாலமுருகன் கோயிலில் கல் தேர் ஒன்று சண்முகர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் கோயிலில் கற்பக விநாயகர் அருள் பாலிக்கிறார். இவருக்கு நவராத்திரி ,தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வராஹி அம்மனுக்கும் சன்னதியும் உள்ளது.

இந்த கோயிலில் திருமணத்தடை குழந்தை பாக்கியம் ஆகியவை தொடர்பாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். அதே சமயம் திருமண தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமி தினத்தில் வராஹி அம்மனிடம் வாழை இலையில் அரிசி வெற்றிலை பழம் தேங்காய் அடிக்கவே வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் விரைந்து திருமணம் நடைபெறும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.