கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை
Thirumavalavan Urges MNM: தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் டார்ச் லைட் சின்னத்தில் அவரை போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருமாவளவன் - கமல்ஹாசன்
சென்னை, மார்ச் 25: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் திமுக கூட்டணிக்கு ஆதரவு எனவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் மநீம தனித்து போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் அவரை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும்’
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணிில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் முடிவு ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற ஒரு மகத்தான திரைக்கலைஞர். 4 சதவிகித வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி தலைவர். அவர் நம்முடன் இருப்பதும் நம் கூட்டணிக்கு பலம்.
இதையும் படிக்க : C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின்போது வாக்கு வங்கி வலிமை தான் முதன்மையாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கட்சிகளின் கருத்தியல் வலிமை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகியுள்ளது.
திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை
கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை… pic.twitter.com/aMHlVCMuYB
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 25, 2026
தற்போது நடந்த தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடங்கள் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள நெருடல் காரணமாக அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. கட்சிகளின் விருப்பத்திற்கு மாறாக கூட்டணிக்கு தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையது அல்ல.
இதையும் படிக்க : அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டி… எந்தெந்த இடங்கள் தெரியுமா.. லிஸ்ட் இதோ!
மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிட முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். வாக்கு வங்கி வலிமையும் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பு வலிமையும் கொண்ட கமல்ஹாசன் அவ்வாறு விட்டுவிட மாட்டோம் . தொகுதி எதுவாக இருந்தாலும் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் பெருமதிப்பையும் உயர்த்திட வேண்டும் என தோழமையும், தங்களின் உடன்பிறப்பு என்ற உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.