4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!

Tamilnadu Assembly Election: தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 4 தொகுதிகள் ஒதுக்கியதற்கு மதிமுக அதிருப்தியும் தெரிவித்தது.

4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

01 Apr 2026 13:51 PM

 IST

Tamilnadu Polls 2026: சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் – 28, தேமுதிக-10, விடுதலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-5, இந்திய கம்யூனிஸ்ட்-5. மதிமுக-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 மற்றும் சில கூட்டணிக் கட்சிகள் என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 70 இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக 164 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இதையும் படிக்க: தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு:

தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வகையில் மதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சீர்காழி தொகுதியில் தனிச்சின்னத்தில் மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் களம் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

4 தொகுதிகளிலும் உதயச்சூரியன் சின்னம்:

இந்நிலையில், தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் வேட்பாளர் இரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை அறிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் விஜய்யும் வீழ்ச்சி அடைவார்”.. பியூஸ் கோயல் விமர்சனம்!!

176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்:

தனி சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
உள்துறை செயலருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிர்மல் குமார்? -வெளியான தகவல்
புதுச்சேரியில் காணொளி வாயிலாக பிரச்சாரம்? காரணம் இதுவா?
Thangam Thenarasu Tamil Nadu Election: 5 முறை அடுத்தடுத்து வெற்றி… 6- ஆவது முறை வெற்றியை தன்வயப்படுத்துவாரா தங்கம் தென்னரசு!
ரூ.5 ஆயிரம் உதவித்தொகை – பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் ஏராளமான வாக்குறுதிகள்.. பாமக தேர்தல் அறிக்கையில் தகவல்!
தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!
K.K.S.S.R.Ramachandran Tamil Nadu Election: எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..