“மக்களை நம்பாதவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவார்”.. விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!!

Tamilnadu Assembly Election: திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே எல்லோரையும் இணைத்து கூட்டணி அமைத்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் என்று சொல்லும் கட்சிகள் ஏன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன? தனித்து நிற்க வேண்டியது தானே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களை நம்பாதவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவார்.. விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!!

சீமான்

Updated On: 

02 Apr 2026 08:54 AM

 IST

Tamilnadu Polls 2026: மக்களையும், தன்னையும் நம்புபவர் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. தொடர்ந்து, தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கு சரியாக இன்னும் 21 நாட்கள் மட்டுமே உள்ளதால், தமிழகம் இதுவரை இல்லாத அளவு உட்சகட்ட அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு

5 ஆண்டுகளுக்கு பின் குறையை கேட்கும் திமுக:

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று காந்திபுர பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக ஆட்சி முடியும் நேரத்தில் உங்கள் குறையை சொல்லுங்கள் என்று கேட்கிறது. அப்படி என்றால் 5 ஆண்டில் மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? ஸ்டாலின் நல்லாட்சி தந்திருந்தால் மக்களே உங்கள் ஆட்சி தொடரட்டும் என்பார்கள். அதனை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.

பிரிட்ஜ் பக்கம் வந்துவிட்டார்கள்:

திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கிறோம் என்கிறார்கள். மக்களின் குறைகள் என்னவென்றே தெரியாமல் தான் இதுநாள் வரை ஆட்சி நடத்தியுள்ளனர். மிக்சி, கிரைண்டர், டி.வி என கொடுத்து தற்போது அதனை எல்லாம் தாண்டும் விதமாக பிரிட்ஜ் பக்கம் வந்துள்ளார்கள்.

அதிமுக ஊழலற்ற கட்சி ஆகிவிட்டதா?

திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே எல்லோரையும் இணைத்து கூட்டணி அமைத்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் என்று சொல்லும் கட்சிகள் ஏன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன? தனித்து நிற்க வேண்டியது தானே? அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு வரை அண்ணாமலை, திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்று கூறினார். தற்போது கூட்டணியில் சேர்ந்து விட்டதால் அதிமுக ஊழலற்ற கட்சி ஆகிவிட்டதா? தேர்தல் வெற்றிக்காக கூட்டணி மாறி மாறி கட்சிகள் செயல்படுகின்றன.

2 தொகுதிகளில் போட்டி:

நாங்கள் எப்போதும் தனித்தே பயணிக்கிறோம். எங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 4 முறை பொதுத்தேர்தலில் நின்று தோற்றுருக்கிறோம். ஆனாலும் மீண்டும், மீண்டும் உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறோம். நாங்கள் 100 சதவீதம் மக்களை நேசிக்கிறோம். மக்களையும், தன்னையும் நம்பாதவர் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவார். ஆனால், வசனம் பேசுவது, நான் உச்சம் என சொல்வது. என்ன உச்சம்? பெரிய ஹீரோ என்றால் தனித்து ஒரேதொகுதியில் நிற்க வேண்டும். நம்பிக்கை வேண்டும்.

இதையும் படிக்க : 4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!

நம்பிக்கையுடன் இருங்கள், நாம் வெல்வோம் என சொல்வது எதற்கு? உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், எதுக்கு இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும்? ஒருவர் ஒருநேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.  வரலாற்றில் எங்கள் அளவுக்கு யாரும் தோற்க முடியாத அளவுக்கு தோல்வியடைந்தோம். 2 முறை தேர்தலில் தோற்ற நான் தொடர்ந்து ஒரு தொகுதியில் மட்டுமே மீண்டும் களம் காண்கிறேன். காரணம் மக்கள் மீதுள்ள நம்பிக்கை. நான் வெற்றி பெறுவேன் என்ற என்பிள்ளைகள் நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..