அன்புமணிக்கு எதிரான வழக்கு… பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Pmk Founder Ramados : மாம்பழம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருந்த கடிதத்தை ரத்து செய்யக் கோரி பா. ம. க தலைவர் அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார்.

அன்புமணிக்கு எதிரான வழக்கு... பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

அன்புமணி மீதான வழக்கை திரும்ப பெற்ற ராமதாஸ்

Published: 

27 Feb 2026 16:05 PM

 IST

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கட்சியின் தலைவர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும், அதற்கான கடிதத்தை அன்புமணியின் டி. நகர் முகவரிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. இதை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த கடிதத்தை ரத்து செய்யவும், தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் கட்சியின் சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என்பது போன்ற கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை வாபஸ் பெறுவதாக கூறிய ராமதாஸ் தரப்பு

அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான கட்சியினர், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தனர். அப்போது, இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதிகள் அமர்வு வழக்கை வாபஸ் பெறுவதற்கு அனுமதி அளித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, மேடையிலேயே ராமதாஸ் மீது அன்புமணி கோபம் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: திமுக vs அதிமுக.. அதிமுக ஆட்சியுடன் விலைவாசி உயர்வை ஓப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்..

பாமக- மாம்பழம் யாருக்கு சொந்தம்

இதை தொடர்ந்து, அவர்களிடையே விரிசல் அதிகமானது. இதனால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பாமக கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் போக்கானது பாமகவும், மாம்பழம் சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற அளவுக்கு சென்றது. இதனால், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் முகாமிட்டு பாமக மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் எனவும், பொதுக்கூட்டத்தில் தன்னை தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அதற்கான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தனர்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்

இதே போல, ராமதாஸ் தரப்பும் பாமக மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தன. இருவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆவணங்களை பரிசோதனை செய்த தேர்தல் ஆணையம், பொதுக்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்பு மணிக்கே பாமகவும், மாம்பழம் சின்னமும் சொந்தம் என்று தெரிவித்திருந்தது. அதன்படியே, (அன்புமணி தரப்பு) பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளதாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – காட்டமான பதிவை வெளியிட்ட அதிமுக ஐடி விங்..

Follow Us
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!