AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Puducherry Elections 2026 LIVE: நிறைவு பெற்ற ஜனநாயக திருவிழா.. புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு..

Puducherry Assembly Elections 2026 Live Updates in Tamil : ஏப்ரல் 9ம் தேதியான இன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட 30 சட்டமன்றத் தொகுதிகளை புதுச்சேரி யூனியன் பிரதேசம் கொண்டுள்ளது. அடுத்த ஆட்சி யார் என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்

C Murugadoss
C Murugadoss | Updated On: 09 Apr 2026 18:36 PM IST
Share
Puducherry Elections 2026 LIVE:  நிறைவு பெற்ற ஜனநாயக திருவிழா.. புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு..
புதுச்சேரி தேர்தல் நேரலை

LIVE NEWS & UPDATES

  • 09 Apr 2026 06:36 PM (IST)

    புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு..

    புதுச்சேரி சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • 09 Apr 2026 05:56 PM (IST)

    புதுச்சேரியில் 86% வாக்குகள் பதிவு…

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

  • 09 Apr 2026 05:44 PM (IST)

    5 மணி நிலவரம் – புதுச்சேரியில் 86.87% வாக்குகள் பதிவு

    Puducherry Election 5 Pm

    Puducherry Election 5 Pm

  • 09 Apr 2026 05:28 PM (IST)

    பீகார் முதல்வர் நிலைமை எனக்கு ஏற்படாது… என்.ரங்கசாமி நம்பிக்கை!

     பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் நிலைமை தனக்கு ஏற்படாது என்றும், புதுச்சேரியில் எனது தலைமையில் ஆட்சி அமையும் என்று பாஜக தலைமை கூறியுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி தெரிவித்தார்.

  • 09 Apr 2026 05:03 PM (IST)

    புதுச்சேரியில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு தொகுதிகள்

    மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி மாஹே  59.39% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும்  காரைக்கால் தெற்கு
    67.4 சதவிகிதமும், நெடுங்காடு 69.56 சதவிகிதமும், உப்பளம் 70.15 சதவிகிதமும், முதலியார்பேட்டை 70.43சதவிகிதமும் பதிவாகியுள்ளது.

  • 09 Apr 2026 04:45 PM (IST)

    பாஜக வேட்பாளரும் புதுச்சேரி உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் திருக்கனூரில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

  • 09 Apr 2026 04:36 PM (IST)

    புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், காமராஜர் நகர் தொகுதி வேட்பாளருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது மனைவியுடன் இணைந்து ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டளித்தார்.

  • 09 Apr 2026 04:23 PM (IST)

    முடங்கிய இணைய தளம்

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கம் முடங்கியது.  புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 72.44% வாக்குகள் பதிவானதாக காண்பித்த நிலையில் இணையதள பக்கம் திடீரென முடங்கியது

  • 09 Apr 2026 04:02 PM (IST)

    மதியம் 3 மணி நிலவரப்படி 67% வாக்குப்பதிவு

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 67 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • 09 Apr 2026 03:25 PM (IST)

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. வாக்கு செலுத்திய எம்.பி வைத்திலிங்கம்..

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

  • 09 Apr 2026 02:31 PM (IST)

    அனைவரும் தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும் – தவெக தலைவர் விஜய்..

    புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்னும் சில மணி நேரமே இருக்கும் சூழலில் அனைவரும் தவராமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • 09 Apr 2026 01:56 PM (IST)

    Puducherry Polling: 1 மணிக்கே 50% வாக்குப்பதிவு

    1 மணிக்கே 50% வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மாலை 6 மணிக்குள் கணிசமானவர்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 80% தாண்டும் என கணிக்கப்படுகிறது

  • 09 Apr 2026 01:39 PM (IST)

    Puducherry Voting: 50% கடந்த வாக்குப்பதிவு

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பகல் மணி 1 மணி நிலவரப்படி 55.41 சதவீதம் வாக்குப்பதிவு

    பதிவு

    Puducherry Election 1 Pm

    Puducherry Election 1 Pm

  • 09 Apr 2026 01:32 PM (IST)

    தீவிர விசாரணை நடைபெறுகிறது

    அந்தத் டோக்கன்களில் என்ன எழுதப்பட்டுள்ளது? அவை எந்தக் கடையைக் குறிக்கின்றன? அல்லது பணப் பரிமாற்றத்திற்கான குறியீடுகளா? என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது

  • 09 Apr 2026 01:14 PM (IST)

    மளிகைப் பொருட்கள் டோக்கனா?

    இந்தத் டோக்கன்கள் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது குறிப்பிட்ட கடைகளில் மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ‘பரிசு டோக்கன்கள்’ என்று எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

  • 09 Apr 2026 12:58 PM (IST)

    TVK Vijay : கடைசி மணித்துளி வரை – விஜய் வேண்டுகோள்

    கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    பதிவு

  • 09 Apr 2026 12:55 PM (IST)

    Puducherry Voting: ‘பரிசு டோக்கன்கள் சர்ச்சை என்ன?

    புதுச்சேரி பாகூர் தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரகசியமாக டோக்கன்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது

  • 09 Apr 2026 12:46 PM (IST)

    புகை வர காரணம் என்ன?

    அதீத சூடு காரணமாக பேட்டரியில் இருந்து புகை வந்திருக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென புகை வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

  • 09 Apr 2026 12:15 PM (IST)

    10 நிமிடம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

    திடீரென புகை வந்ததால் 10 நிமிடம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு. பேட்டரியை மீண்டும் மாற்றி வாக்குப்பதிவு தொடங்கியது

  • 09 Apr 2026 12:00 PM (IST)

    Karaikal Constituency Election : வாக்கு இயந்திரத்தில் புகை

    காரைக்கால் தெற்கு தொகுதி வாக்குச்சாவடி வாக்கு இயந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு

  • 09 Apr 2026 11:45 AM (IST)

    வேகத்தில் நடக்கும் வாக்குப்பதிவு

    11 மணி நிலவரப்படி 37.70 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மதியம் 1 மணி அளவிலேயே 50% தொட்டுவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

  • 09 Apr 2026 11:27 AM (IST)

    Puducherry Voting: 11 மணி நிலவரப்படி 37.70 சதவீதம்

    புதுச்சேரி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 37.70 சதவீதம் வாக்குப்பதிவு

    Puducherry Election 11am

    Puducherry Election 11am

  • 09 Apr 2026 11:25 AM (IST)

    ‘அப்பா பைத்தியம் சாமி’ கோவிலில் வழிபாடு

    முதலமைச்சர் ரங்கசாமி, முக்கியமான எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் தனது ஆன்மீக குருவான ‘அப்பா பைத்தியம் சாமி’ கோவிலில் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இன்றும் அதேபோலச் சிறப்பு வழிபாடுகளை முடித்துக்கொண்டு வாக்களித்தார்

  • 09 Apr 2026 11:14 AM (IST)

    N. Rangaswamy Constituency : 2 தொகுதிகளில் போட்டியிடும் ரங்கசாமி

    இந்தத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான என்.ரங்கசாமி மீது ஒட்டுமொத்தப் பார்வையும் இருந்து வருகிறது

  • 09 Apr 2026 10:59 AM (IST)

    . மக்களோடு இருக்கிறோம் – ரங்கசாமி

    பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியளர்களை சந்தித்தார். அதில் நாங்கள் எப்போதும் மக்களுக்காகவே இருக்கிறோம். மக்களோடு இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்

     

  • 09 Apr 2026 10:43 AM (IST)

    Puducherry Polling: இரண்டு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்

    இரண்டு தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவேன். எண்ணிக்கையை விட, ஆட்சி அமைப்பதுதான் எனக்கு முக்கியம் – ரங்கசாமி

  • 09 Apr 2026 10:14 AM (IST)

    Rangaswamy Vote : வாக்களித்துவிட்டு பைக்கில் சென்ற ரங்கசாமி

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பிறகு, புதுச்சேரி முதலமைச்சரும், மங்கலம் மற்றும் தட்டஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிகளின் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (ஏ.ஐ.என்.ஆர்.சி.) வேட்பாளருமான என். ரங்கசாமி தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்

    வீடியோ

  • 09 Apr 2026 09:55 AM (IST)

    இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம்

    புதுச்சேரியில் இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.

  • 09 Apr 2026 09:43 AM (IST)

    பைக்கில் வந்த புதுச்சேரி முதல்வர்

    இரு சக்கர வாகனத்தில் வந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

  • 09 Apr 2026 09:25 AM (IST)

    17.41% வாக்குப்பதிவு

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குப்பதிவு

    Puducherry Election

    Puducherry Election

  • 09 Apr 2026 09:25 AM (IST)

    Puducherry Polling: பரிசு டோக்கன் விநியோகத்ததாக புகார்.

    புதுச்சேரியில் பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பரிசு டோக்கன் விநியோகத்ததாக புகார். இது குறித்து விசாரணை

  • 09 Apr 2026 09:10 AM (IST)

    ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும்

    மக்கள் பெருமளவில் வெளியே வந்து தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும் – நாராயணசாமி

  • 09 Apr 2026 08:56 AM (IST)

    வி. நாராயணசாமி வாக்குப்பதிவு

    புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான வி. நாராயணசாமி தனது வாக்கைச் செலுத்திய பிறகு, “புதுச்சேரி மக்கள் இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இங்கு இந்தியக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்

  • 09 Apr 2026 08:29 AM (IST)

    ரோபோக்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு

    வாக்காளர்களை வரவேற்கும் ரோபோக்கள், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை  விளக்கமாக எடுத்துக்கூறுகின்றன.

  • 09 Apr 2026 08:14 AM (IST)

    ரோபோ வாக்காளர்களை வரவேற்கிறது

    புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வி.ஓ.சி. அரசுப் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், நீலா என்ற ரோபோ வாக்காளர்களை வரவேற்று வருகிறது.

    வீடியோ

  • 09 Apr 2026 08:03 AM (IST)

    செல்போன்களை வெளியில் ஒப்படைக்க ஏற்பாடு

    வாக்களிக்க உள்ளே செல்பவர்கள் செல்போன்களை வெளியில் ஒப்படைத்துவிட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களித்தப்பின் செல்போன்களை பெற்று செல்லலாம்.

  • 09 Apr 2026 08:01 AM (IST)

    Puducherry Voting: காலை 7 மணிக்கே மக்கள் கூட்டம்

    காலை 7 மணிக்கே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம்

  • 09 Apr 2026 07:47 AM (IST)

    மே 4- ஆம் தேதி முடிவுகள்

    தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஒரே கட்டமாக எண்ணப்பட்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

  • 09 Apr 2026 07:40 AM (IST)

    பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

    கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பதிவு ஒன்றின் மூலம் மக்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மூன்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசத்திற்கும் தனித்தனியாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

  • 09 Apr 2026 07:40 AM (IST)

    Puducherry Polling: புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்

    புதுச்சேரியில் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்க வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம்

  • 09 Apr 2026 07:33 AM (IST)

    Puducherry Polling: மொத்த வாக்காளர்கள் விவரம்

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.40 லட்சம் ஆண் வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர்

  • 09 Apr 2026 07:25 AM (IST)

    Puducherry Voting: 1,099 வாக்குச்சாவடி மையங்கள்

    தேர்தலுக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சுமார் 1,099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

  • 09 Apr 2026 07:15 AM (IST)

    294 வேட்பாளர்கள் போட்டி

    தேசிய கட்சி வேட்பாளர்கள் 34 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் வேட்பாளர்கள் 80 பேர், 117 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  • 09 Apr 2026 06:55 AM (IST)

    Puducherry Polling: 4 முனை போட்டி நிலவி வருகிறது.

    தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேஜ கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

  • 09 Apr 2026 06:43 AM (IST)

    Puducherry Polling: ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் முடிகிறது

    புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு வருகிற ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடைபெற உள்ளது

  • 09 Apr 2026 06:30 AM (IST)

    30 சட்டமன்ற தொகுதிகள் விவரம்

    புதுச்சேரி மாநிலமானது யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுச்சேரி பிராந்தியத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம்  ஆகிய பிராந்தியங்களில் தலா 1 சட்டமன்ற தொகுதிகளும் என 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • 09 Apr 2026 06:18 AM (IST)

    Puducherry Voting: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடக்கம்

    புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

  • 09 Apr 2026 06:17 AM (IST)

    Puducherry Polling: புதுச்சேரியில் இன்று தேர்தல்

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Puducherry Assembly Elections : அஸ்ஸாம் மற்றும் கேரளாவுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியக் கூட்டணிக்கும் இடையிலான ஒரு கௌரவப் போராகும். இன்று நடைபெறவிருந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட 30 சட்டமன்றத் தொகுதிகளை புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளடக்கியுள்ளது. யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் வருகையை அதிகரிப்பதற்காக, தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தொடர் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். ஆளும் NDA கூட்டணி சார்பில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் (AINRC) 16 தொகுதிகளிலும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி (IJK) ஆகியவையும் தலா இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

வீடியோ

Published On - Apr 09,2026 6:02 AM

Follow Us