Perambur Constituency Election 2026: மழைநீர் வடிகால் முதல் போக்குவரத்து நெரிசல் வரை.. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் நிலவரம் என்ன?
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைப் எடுத்துக்கொண்டால், முக்கியமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. பெரம்பூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதிகள் முதல் சாலைகள் வரை பல இடங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 10, 2026: சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகும். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைப் பொருத்தவரையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் 1,05,267 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆர். தனபாலன் 50,291 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – யார் ஆதிக்கம்?
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைப் எடுத்துக்கொண்டால், திமுக வலுவாக உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதாவது 1977ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள ஒரு தொகுதியாகவும், அதேபோல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. இது வட சென்னை பகுதிகளின் முக்கிய நகர்ப்புற அரசியல் மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
முக்கிய பிரச்சனைகள் என்ன?
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைப் எடுத்துக்கொண்டால், முக்கியமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. பெரம்பூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதிகள் முதல் சாலைகள் வரை பல இடங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க: ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை என குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் சூழலில், தற்போது வரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகும். அதேபோல் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்:
எனவே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வலுவாக இருந்தாலும், மக்கள் தரப்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்படும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காததால் சிலரிடம் அதிருப்தி நிலவி வருகிறது என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த முறை திமுக வெற்றி பெறுமா என்பது அவர்கள் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பிரச்சனை தீர்வுகளின் மீது தான் அமையும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.