Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்த காலம் முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 4 முறை தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து தற்போது எம்எல்ஏவாக இருந்து வரும் நத்தம் ஆர். விஸ்வநாதன் மீண்டும் அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் களமிறக்கப்படுவாரா.

Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

நத்தம் ஆர்.விஸ்வநாதன்

Published: 

24 Mar 2026 13:43 PM

 IST

அதிமுகவில் நத்தம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் நத்தம் ஆர். விஸ்வநாதன். இவர், கடந்த 1949- ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தார். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்தது முதல் தொண்டனாக கட்சிப் பணியாற்றி வந்த விஸ்வநாதனுக்கு கடந்த 1999- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நத்தம் ஆர். விஸ்வநாதன் வெற்றியை பதிவு செய்து சட்டமன்றத்துக்குள் எம். எல். ஏவாக அடியெடுத்து வைத்தார். இதேபோல, 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட நத்தம் ஆர். விஸ்வநாதன் 2- ஆவது வெற்றியை பதிவு செய்தார்.

தொடர்ச்சியாக  4 முறை வெற்றி பெற்றவர்

இதைத் தொடர்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் கண்ட நத்தம் ஆர். விஸ்வநாதன் 3- ஆவது வெற்றியை பதிவு செய்தார். 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் இறங்கிய நத்தம் ஆர். விஸ்வநாதன் பெருவாரியான வாக்குகள் பெற்று 4- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த 1999- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கு. ப. கிருஷ்ணனை வீழ்த்தி 55,604 வாக்குகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தார்.

மேலும் படிக்க: V.Jayaraman Tamil Nadu Election: 5 முறை தொடர் வெற்றியாளர் வி.ஜெயராமன் … 6-ஆவது முறை வெற்றிக்கு வித்திடுமா உடுமலைப்பேட்டை தொகுதி!

1.07 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நத்தம் விஸ்வநாதன்

2006 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டியம்பலத்தை வீழ்த்தி 62,292 வாக்குகள் பெற்றார். 2011 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய விஸ்வநாதன் திமுக வேட்பாளர் விஜயனை வீழ்த்தி 94,947 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2016- இல் போட்டியிடாத நத்தம் விஸ்வநாதன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். அப்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம். ஏ. ஆண்டி அம்பலத்தை வீழ்த்தி 1.07,762 வாக்குகள் பெற்று வெற்றியை நிலை நிறுத்தினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமை மீண்டும் இவரை இதே தொகுதியில் களமிறக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக வசமாகுமா நத்தம் சட்டமன்ற தொகுதி

அதே வேளையில், வேறொரு நபரை இந்த தொகுதியில் களமிறக்க முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நத்தம் தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வருகின்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நத்தம் ஆர். விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக தலைமை முடிவின் கீழ் அறிவிக்கப்படும் வேட்பாளரை பொருத்து நத்தம் தொகுதி யார் வசம் செல்லும் என்பதை பார்க்க முடியும்.

மேலும் படிக்க: M.Appavu Tamil Nadu Election: அன்று முதல் இன்று வரை.. மு.அப்பாவு கட்டுப்பாட்டில் ராதாபுரம் தொகுதி.. இந்த முறை எப்படி!

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்