மாலத்தீவில் நடந்த படகு விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேமண்ட் குழுமத் தலைவர் கௌதம் சிங்கானியா, சென்றிருந்த ஸ்பீட் போட் கவிழ்ந்ததில் காயமடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, மாலத்தீவின் வாவு அடோல் பகுதியில் உள்ள ஒரு தீவிற்கு அருகே இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.