சட்டமன்ற தேர்தல்.. சீமான் போட்டியிடும் தொகுதி இதுதானா? வெளியான தகவல்!

Naam Tamil Party Seeman: வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ள நிலையில், அவர் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன தொகுதி...

சட்டமன்ற தேர்தல்.. சீமான் போட்டியிடும் தொகுதி இதுதானா? வெளியான தகவல்!

சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்

Updated On: 

16 Feb 2026 11:35 AM

 IST

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் முடிவில் இருந்து வருகிறது. இதற்கான தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை அனைத்து கட்சிகள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2010- ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வருகிறது. இதே போல, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 21- ஆம் தேதி ( சனிக்கிழமை) திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை சீமான் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நாதக சீமான் போட்டியிடும் தொகுதி எது

அதன்படி, நாம் தமிழர் கட்சியில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர் தற்போது, சீமான் பிறந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் வரும் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “திமுக – காங்., கூட்டணி நீடிக்காது.. புகையத் தொடங்கிவிட்டது”.. இபிஎஸ் பரபர பேச்சு

திருவொற்றியூரில் போட்டியிட்டு 3-ஆம் இடம் பிடித்த சீமான்

சீமானின் சொந்த மாவட்டமாக இருப்பதாலும், வேறு சில காரணங்களாலும் அவருக்கு அதிக அளவிலான வாக்குகள் கிடைக்கும் எனவும், இந்த தொகுதியில் சீமான் உறுதியாக வெற்றி வாய்ப்பை பெறுவார் என்றும் அந்த கட்சியினர் நம்புகின்றனர். இதனிடையே, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார். இதில், 24.3 சதவீத வாக்குகளை பெற்று 3- ஆவது இடத்தை பிடித்திருந்தார்.

தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் நாதகவினர்

வரும் சட்டமன்றத் தேர்தலில் சீமானை வெற்றி பெற செய்ய வைக்கும் நோக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக ” எங்கள் தேசம் என்ற யூடியூப் சேனல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?