AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேட்பாளரின் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா.. வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த நபர்.. பின்னால் வந்த சிக்கல்!

karunchiruthai Makkal Iyakkam: திருநெல்வேலியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் அதிசய பாண்டியன் பாடை கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால், அவர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பாளரின் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா.. வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த நபர்.. பின்னால் வந்த சிக்கல்!
பாடை கட்டி வந்து வேட்புமனு தாக்கல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Mar 2026 20:16 PM IST

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பு, பிரச்சாரம், வேட்பு மனு தாக்கல் ஆகிய பணிகள் தொடங்கி விட்டாலே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்யும் வேலைகளில் வினோத நிகழ்வுகள் மற்றும் வினோத சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான கே. எஸ். மஸ்தான் திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது காலில் வேட்பாளர்களை விழ வைத்து வாக்கு கேட்பது எப்படி என்பது குறித்து லைவ்வாக பாடம் எடுத்திருந்தார். இதே போல, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சங்கரநாராயணன் மாட்டு வண்டியில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

5 ரூபாய் நாணயங்களை மூட்டையாக கட்டி சென்ற நாதக வேட்பாளர்

இதே போல, நெல்லை சட்டமன்ற தொகுதியில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தளபதி முருகன் ரஜினி ரசிகர்கள் சார்பில் போட்டியிடுவதாக கூறி ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகையை 5 ரூபாய் நாணயங்களாக மூட்டையில் கட்டி எடுத்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதே போல, தேர்தல் நேரத்தில் பல்வேறு ருசிகரமான, வினோதமான சம்பவங்கள் நிகழ்வது வழக்கமாகும். இதில், மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை மிஞ்சும் வகையில் ஒரு படி மேலே சென்ற கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்க நிறுவனர் அதிசய பாண்டியன் அதிசயமான சம்பவத்தை செய்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாடு தேர்தல் 2026: வாக்குச்சாவடி இல்லை… வாட்ஸ்அப் தான் முடிவா?

பாடை கட்டி கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

அதில், அதிசய பாண்டியன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி உயிரிழந்தவர் உடலை பாடையில் கட்டி தூக்கி வருவது போன்று ஒருவருக்கு மாலை அணிவித்து சிலருடன் சேர்ந்து அந்தப் பாடையை தூக்கி வந்தார். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதிசய பாண்டியனுடன் 4 பேரை மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். இந்த நிலையில், பாடை கட்டி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் அதிசய பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது இடங்களில் அலட்சியமாக செயல்படுதல். பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்படுதல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விநோதமாக செய்ய முயற்சி செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கை பெற்றுள்ளார் அதிசய பாண்டியன்.

மேலும் படிக்க: பிரச்சாரத்தின்போது திடீரென தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான் – காரணம் இதுவா?

Follow Us