பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை..

Annamalai Pressmeet: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல - அண்ணாமலை..

அண்ணாமலை

Updated On: 

21 Jul 2025 06:30 AM

சென்னை, ஜூலை 21, 2025: பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும், அது எங்கள் விருப்பம், மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சியா என கேட்கிறீர்கள், நாங்கள் ஏமாளிகள் கிடையாது. கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும். இல்லை என்றால் இல்லை. எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை” என திட்டவட்டமாக பேசி இருந்தார். இதற்கு தற்போது முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை பதிலளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 10 மாத காலங்களேஏ இருக்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஆயத்தமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்ற மக்களை சந்தித்த சாலை வளம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது – அண்ணாமலை:

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது அது உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது பதவிக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என தெரிவித்துள்ளார்.

Also Read: கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..

பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி இல்லை:

மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என பேசி இருந்த கருத்திற்கு, “ பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல, ஒரு கட்சியை ஏமாற்றி வளர வேண்டிய விருப்பம் பாஜகவிற்கு கிடையாது. இந்த விஷயம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். இதற்கு மேல் இதைப் பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி அமைத்ததில் எனக்கு எந்த பங்கும் கிடையாது அதனால் என்னால் கருத்து சொல்ல முடியாது.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் – ஒற்றை குறிக்கோள்:

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே ஒற்றை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறோம். முன்பை போல அரசியல் களம் கிடையாது. இதை தலைவர்களும் அறிவார்கள். ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா? என கேட்டால் தெரியாது 2024 மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம் இருந்தது என்பதை நன்றாக அறிவார்கள் ” என பேசியுள்ளார்