இளைஞர்களுக்கு பைக் மானியம்.. எடப்பாடியின் கடைசி நிமிட ‘மெகா’ தேர்தல் வாக்குறுதிகள்!

AIADMK 10 Election Promises: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுகவின் கடைசி தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பன 10 வாக்குறுதிகள் உள்ளன.

இளைஞர்களுக்கு பைக் மானியம்.. எடப்பாடியின் கடைசி நிமிட மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

அதிமுகவின் 10 வாக்குறுதிகள்

Published: 

22 Apr 2026 07:52 AM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சியில் தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரபடுத்தின. அந்த வகையில், வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு வகையில் கவர்ச்சியான வாக்குறுதிகளை அறிவித்தனர். அதன்படி, அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சுமார் 297 வாக்குறுதிகளை பல்வேறு கட்டங்களாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அதிமுக சார்பில் மேலும் 10 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 17- ஆவது சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் 297 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் மேலும் 10 வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இதில்,

மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக இருங்கள்”.. தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..

  • அதிமுக ஆட்சி அமைந்த உடன் மா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாம்பழத்துக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வரும் அத்துக்கட்டு பண்டிகை தொடர்ந்து நடைபெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.
  • கட்டட தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டட தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
  • பனை தொழிலாளர்கள் மரம் ஏறும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
  • அரசு கேபிள் டிவி கட்டணம் தற்போது இருக்கும் விலையில் சுமார் 50 சதவீதமாக குறைக்கப்படும்.
  • விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் முந்திரி உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி இலவசமாக வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கான 24/7 செயல்படும் வார் ரூம் அமைக்கப்படும்.
  • மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வட்டளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  • இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் ஒரு மாதத்தில் உரிமம் வழங்கப்படும். அதற்கான மானியம் 25 % இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • வேலைக்கு செல்லும் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பைக் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ரெய்டு என அவதூறு பரப்பிய செல்வப்பெருந்தகை.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஐ.டி அதிகாரிகள் கோரிக்கை..

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..