துரோகம் பாஜவுக்கு பழக்கம்… துணை போவது அதிமுகவுக்கு வழக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்!

Dmk Leader M.K.Stalin : தமிழகத்துக்கு பாஜக துரோகம் செய்வது பழக்கமாகவும், அதற்கு அதிமுக துணை போவது வழக்கமாக இருந்து வருவதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார் .

துரோகம் பாஜவுக்கு பழக்கம்... துணை போவது அதிமுகவுக்கு வழக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்!

அதிமுக-பாஜகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

Updated On: 

11 Apr 2026 19:10 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, புதுக்கோட்டையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டி பேசியதாவது: தமிழகத்திற்கு மீண்டும் பாஜகவால் ஆபத்து வந்துள்ளது. பாஜகவையும், அதிமுகவையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தமிழகத்துக்கும், டெல்லிக்குமான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்துக்கு மக்களாட்சியே தேவை. திமுக அரசு திட்டத்தை செயல்படுத்தினால், அது சாதனை திட்டமாக இருந்து வருகிறது. திமுக அரசின் அதிரடி திட்டங்களை பல்வேறு மாநிலங்களும் காப்பி அடித்து வருகின்றன. இதே போல, மத்திய அரசும் காப்பியடித்து வருகிறது. பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடிய நிலையை மகளிர் உரிமைத்தொகை மூலமாக உடைத்து உள்ளோம்.

திமுக அரசின் திட்டங்களை மத்திய அரசு காப்பியடிக்கிறது

பெண்களின் சுதந்திர பயணத்திற்கு அடிப்படையாக விடியல் பயணம் அமைந்துள்ளது. என்னுடைய மக்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை நான் செய்ய உள்ளேன். அதை நீங்கள் அனைவரும் பார்க்கத்தான் போகிறீர்கள். இந்தியாவில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திராவிட மாநில அரசு மாற்றி உள்ளது. நான் கலைஞரின் மகன் சொன்னதை மறைக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். நான் செய்த திட்டங்களை கூறி வாக்கு கேட்பது போல. பாஜகவின் கிளைக் கழக செயலாளராக இருக்கும் பழனிசாமி இது போன்று திட்டங்களை கூறி வாக்கு கேட்க முடியுமா.

மேலும் படிக்க: “கரூரில் இருந்து செந்தில் பாலாஜி தொகுதி மாறியது ஏன்?” மக்களுக்கும் புரியும்.. தவெக சராமாரி கேள்வி..

ரூ.10 ஆயிரம் கோடி அளித்தாலும் ஹிந்தியை அனுமதிக்க முடியாது

எந்த இடத்திலும் பழனிசாமி தமிழகத்தின் உரிமைகள், கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து பேசியது கிடையாது. ஏனென்றால் பாதம் தாங்கி பழனிசாமி இடம் கொள்கையும் இல்லை, சாதனைகளும் இல்லை. பாஜகவை தமிழகத்தின் பின் வாயில் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரே பழனிசாமி. தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதற்கு, பழனிசாமி எதிராக குரல் கொடுக்கவில்லை. ஹிந்தியை திணிப்பதற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளித்தாலும் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டேன்.

துரோகம் செய்வது பாஜக பழக்கம்

இவையெல்லாம் ஆர்எஸ்எஸ்- இன் கொள்கையில் உள்ள ஒரு பகுதியாகும். இதற்கெல்லாம் ஆமாம் சாமி போடக்கூடிய நபராக இருக்கிறார் அடிமை பழனிசாமி. தமிழகத்தின் மீது உண்மையிலேயே பழனிசாமிக்கு அக்கறை இருந்தால் ஒரே மேடையில் பிரதமர் மோடி முதல் அமைச்சர்கள் வரை அனைவரையும் வைத்து தமிழகத்துக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதும் என்று கூற முடியுமா. தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பாஜகவின் பழக்கமாக இருந்து வருகிறது. அதற்கு அதிமுக துணை போவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-tamil-nadu-drowning-in-debt-edappadi-palaniswami-lashes-out-at-cm-stalin-70296.html

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?