சென்னை, மார்ச் 28, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகியவை முக்கியமான நான்கு முனைப் போட்டியில் உள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்:
இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் கடுமையாக நடைபெற்றன. குறிப்பாக திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி:
- இந்திய தேசிய காங்கிரஸ் – 28 தொகுதிகள்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி – 8 தொகுதிகள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5 தொகுதிகள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 5 தொகுதிகள்
- மதிமுக – 4 தொகுதிகள்
- தேமுதிக – 10 தொகுதிகள்
மக்கள் நீதி மையம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: பொன்னேரி, வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், தணி, ஈரோடு, கொளக்க, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், வளவன்கோடு, புளியூர் ஆகிய தொகுதிகள் ஆகும்.
மேலும் படிக்க: சென்னை: அண்ணா பல்கலை. தொடரும் சர்ச்சைகள்: யார் பொறுப்பு?
யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள்?
மீதமுள்ள தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில், 16 தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை கூட்டணி கட்சிகளுக்கான முழுமையான தொகுதி பட்டியல் வெளியிடப்படும் என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.