AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் இரண்டு கப்பல்கள்!

Two Ships Crossed Strait Of Hormuz | ஈரான் போரால் இந்தியா மிக கடுமையான எண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டுள்ளது. பல இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வந்துக்கொண்டு இருக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் இரண்டு கப்பல்கள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Mar 2026 16:43 PM IST

புதுடெல்லி, மார்ச் 28 : இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் (Iran), ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியது. இதன் காரணமாக கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துச் செல்ல முடியாத சூழல் உருவான நிலையில், உலக நாடுகள் கடும் எண்ணெய் தட்டுபாடால் அவதி அடைந்து வருகின்றன. இந்த சூழலில் ஹோர்முஸ் நீரிணையை சில நாட்டு கப்பல்கள் கடந்துச் செல்ல ஈரான் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையை கடந்து இரண்டு கப்பல்கள் இந்தியா நோக்கி வந்துக்கொண்டு இருக்கின்றன.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் இந்தியா

இந்தியா தனது எண்ணெய் தேவைகளுக்கு உலக நாடுகளையே நம்பியுள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கடும் சவால்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக இந்தியா பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டு வருகிறது. ஹோர்முஸ் நீரிணை வழியாக அவ்வப்போது கடந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்களால் இந்தியாவின் கேஸ் சிலிண்டர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விநியோக அளவு அதிரடியாக உயர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ஹோர்முஸை கடந்து இந்தியா நோக்கி வரும் கப்பல்கள்

பெட்ரோலிய பொருட்களுடன் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இரண்டு வர்த்தக கப்பல்கள் இன்று இந்தியா நோக்கி வந்துக்கொண்டு இருக்கின்றன. அந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்தியாவின் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும் சில கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நீடிக்கும் போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்!

இது தொடர்பாக மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கொடி உடன் கூடிய கப்பல்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் தொடர்பான எந்த வித சம்பங்களும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

Follow Us