மயிலாப்பூர் தொகுதிக்கு குறி…திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!

Mylapore Assembly constituency: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை பெறுவதில் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மவுசு கூடியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதிக்கு குறி...திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!

மைலாப்பூர் தொகுதிக்கு குறி வைக்கும் திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள்

Updated On: 

06 Feb 2026 11:04 AM

 IST

சென்னையில் உள்ள முக்கியமான சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூர் தொகுதியும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த சட்டமன்ற தொகுதியானது நீதி கட்சி காலத்தில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. பெரியளவில் முக்கியத்துவம் வாய்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள விருகம்பாக்கம், வேளச்சேரி தொகுதிகளை விட மயிலாப்பூர் சரியானதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளாராம். மயிலாப்பூர் தொகுதியில் பிராமண சமுதாயத்தினர் அதிகமாக வசிப்பதாலும், ஏற்கெனவே கடந்த தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சிக்கு 2 இலக்கத்தில் வாக்குகள் கிடைத்திருந்தது.

மயிலாப்பூர் தொகுதிக்கு குறி வைக்கும் முக்கிய புள்ளிகள்

எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி சார்பில் அதிமுகவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு ஈடாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறாராம். இவர், கடந்த 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்திருந்தார்.

மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் வருகை…தேஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் முக்கிய முடிவு!

ஆயிரம் விளக்கு தொகுதி வேண்டாம்

எனவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி வேண்டாம் எனவும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை தனக்கு ஒதுக்குமாறும் கூறுகிறாராம். இவருக்கு போட்டியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்டோர் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை கேட்பதாக கூறப்படுகிறது. இதே போல, திமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் வேலு மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டி வருகிறாராம்.

மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் திமுக

இந்த தொகுதியில் ஆழ்வார்பேட்டை பகுதி வருவதால், இவருக்கு போட்டியாக அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் இந்த தொகுதியை கேட்டு வருகிறதாம். ஆனால், இதற்கு செவி சாய்க்காத திராவிட முன்னேற்றக் கழக தலைமை, ஒருவேளை மக்கள் நீதி மய்யத்துக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அந்த கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டு விட வேண்டும் என்று நிர்பந்தம் விதிக்க வாய்ப்பு உள்ளதாம்.

மேலும் படிக்க: அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

Related Stories
இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் வருகை…தேஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் முக்கிய முடிவு!
தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..
திறந்திருக்கும் தவெகவின் கூட்டணி வாசல் கதவு..பிரம்மாண்ட ஆஃபருடன் காங்கிரஸுக்கு அழைப்பு?விஜயின் பலே பிளான்!
தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!
அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து
இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் சுங்க வரி 18 சதவிகிதமாக குறைப்பு
தொண்டையில் சிக்கிய அட்டை பூச்சி - 55 வயது நபரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
ரூ.2 கோடிக்கு அரிய வாகன நம்பர் பிளேட்டை வாங்கிய நபர்..