தேமுதிகவைப் பொருத்தவரையில், விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி நீடித்தது. பின்னர், சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
நீண்ட காலமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த மாதம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இது தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் இணைந்துள்ளதைக் குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டணி அமைந்ததையடுத்து, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. அதன்படி, ஒரு மாநிலங்களவை இடமும் 10 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இது கூட்டணி கட்சிகளுக்குள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், புதியதாக இணைந்த தேமுதிகக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டது.
தேமுதிக வேட்பாளர் பட்டியல்:
இந்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுகின்றனர் என்ற விவரங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி:
- விருதாச்சலம் – பிரேமலதா விஜயகாந்த்
- தர்மபுரி – இளங்கோவன்
- சேலம் மேற்கு – மோகன் ராஜ்
- விருதுநகர் – விஜய பிரபாகர்
- ஓமலூர் – இளங்கோவன்
- மயிலம் – இயல் வெங்கடேசன்
- பல்லாவரம் – முருகேசன்
- திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி
- குடியாத்தம் – பிரதாப்
- போளூர் – சரவணன்