இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… தொகுதியை குறைக்க காரணம் இதுதான்… மு.வீரபாண்டியன் விளக்கம்!

Dmk And Cpi Seat Sharing: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு... தொகுதியை குறைக்க காரணம் இதுதான்... மு.வீரபாண்டியன் விளக்கம்!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

Updated On: 

18 Mar 2026 10:57 AM

 IST

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையிலான கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கையெழுத்திட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 தொகுதி குறைக்கப்பட்டு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரஜினிகாந்த் குறித்து பரபரப்பு கருத்து… பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜூனா!

திமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் தங்களது உரிமைகள் அரசியல் கடமைகளை எப்போதும் கடந்து சென்றது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் சட்டமன்றம் மற்றும் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இரு அவைகளிலும் சீட்டுகளை கேட்டு வருகிறோம். அதன் அடிப்படையிலேயே கூட்டணி அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுகவுடன் 3 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி இருந்தோம்.

தொகுதியை குறைத்து கொள்ள காரணம் என்ன

கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு இருந்தோம். தற்போது கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதற்குரிய தார்மீக உரிமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து எங்களை மதிப்பீடு செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம். திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால் தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு முதல்வர் கூறினார். அதன் அடிப்படையில், நாங்கள் எங்களது தொகுதிகளை 5- ஆக குறைத்துக் கொண்டோம். இதற்கு மேலாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தையில் திமுக எங்களை நிர்பந்திக்கவில்லை. வேண்டுகோள் தான் வைத்திருந்தார்கள் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்:-

  • காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்.
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 4 தொகுதிகள்.
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்.
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள்.
  • மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள கட்சிகளுக்கு வரும் நாள்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: Tamil Nadu Assembly Election: இனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடியாது! விவரம் உள்ளே!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்