Ayyappan P Tamil Nadu Election: திமுக – அதிமுக வேட்பாளர்களை மிஞ்சி உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா பி.ஐயப்பன்!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பி. ஐயப்பன் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில், திடீரென விலகி சசிகலா கட்சியில் இதே தொகுதியில் போட்டியிடும் நிலையில் வெற்றியை தக்க வைத்துக்கொள்வாரா!

Ayyappan P Tamil Nadu Election: திமுக - அதிமுக வேட்பாளர்களை மிஞ்சி உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா பி.ஐயப்பன்!

உசிலம்பட்டியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா

Updated On: 

07 Apr 2026 17:11 PM

 IST

அதிமுகவில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களுள் ஒருவருமானவர் பி. ஐயப்பன். இவர், கடந்த 1965- ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி பிறந்தார். அரசியல் ஆர்வம் காரணமாக இளமை காலத்திலேயே அதிமுகவில் இணைந்த ஐயப்பன், தீவிரமாக கட்சி பணி ஆற்றி வந்தார். பின்னர், அவருக்கு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, அந்த தேர்தலில் களமிறங்கிய பி. ஐயப்பன் தனக்கான இடத்தை பெற்று முத்திரை பதித்தார். பின்னர், எம்எல்ஏவாக இருந்து வந்த நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உள் கட்சி மோதல் காரணமாக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். இதில், அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார்.

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட பி.ஐயப்பன்

அவருடன் கட்சியில் இருந்து வெளியேறிய பி. ஐயப்பன், ஓ பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்துடன் அவரது தீவிர ஆதரவாளர்களுள் ஒருவராக செயல்பட்டு வந்தார். பின்னர், தற்போதைய சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் இருந்தவர்கள் திமுகவில் இணைந்து வந்தனர். இதே போல, அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகத்தின் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி. ஐயப்பன் ஆகியோர் திடீரென திமுகவுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் ஆதரவாக குரல் எழுப்ப தொடங்கினர்.

மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/elections/nainar-nagendran-tamil-nadu-election-2026-contesting-tirunelveli-constituency-bharatiya-janata-party-photo-gallery-63471.html

திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

இதில், ஒரு படி மேலே சென்று சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போதே பி. ஐயப்பன் சபையில் எழுந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ஓ பன்னீர்செல்வம் தலைமையில் பி. ஐயப்பன் ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால், ஓ பன்னீர் செல்வத்துக்கு திமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஐயப்பனுக்கு திமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுக-அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து களமாட முடியுமா

இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவிலிருந்து உடனடியாக விலகிய ஐயப்பன் சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சியில் பி. ஐயப்பனுக்கு மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தொகுதியில் வேட்பாளராக பி. ஐயப்பன் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான எதிர்க்கட்சிகளை எதிர்த்து ஐயப்பனால் வெற்றி பெற முடியுமா என்பது தொகுதி மக்களின் கைகளில் உள்ளது.

மேலும் படிக்க: Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!

Follow Us
Related Stories
M.H. Jawahirullah Tamil Nadu Election: 3 முறை தொகுதி மாறி போட்டியிட்ட எம்.ஹெச்.ஜவாஹிருல்லா… நாகை தொகுதியில் வெற்றியை தக்க வைப்பாரா!
எடப்பாடியில் தவெக வாஷ் அவுட்… வேட்பாளர் மாயம்… வேட்புமனு நிராகரிப்பு… என்ன காரணம்!
கருணாநிதி வீட்டு சிறை விவகாரம்… அதிமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை… எடப்பாடி பழனிசாமி உறுதி!
Velachery Constituency Election 2026: வேகமாக வளர்ந்து வரும் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை தொடர் ரத்து… என்ன காரணம்… முன்பிருந்ததை விட விஜய்க்கு வேகம் குறைந்ததா?
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?
சிவபெருமானின் அவதாரம் - 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த கேப்டன் பாபா
ஈரானில் அமெரிக்க போர் விமானம் மீது தாக்குதல்
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்