மகாராஷ்டிராவின் நாசிக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கேப்டன் பாபா என அழைக்கப்பட்ட அசோக் குமார் கராட் என்ற நபர், தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று கூறி, 150க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலீஸ் விசாரணையில், இந்த நபர் பெண்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, தந்திர பூஜை மூலம் பிரச்னைகள் தீரும் என்று கூறி அவர்களை ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது. பல பெண்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் மருந்து கலந்து கொடுத்து, அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.